(Reading time: 13 - 25 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

ஒருமுறை வழிதவறிப் போய் விட்டேன் வழி தெரியாமல் காட்டில் சுற்றி அலைந்த போது வெகு நேரம் கழித்து தான் என்னை தேடி கண்டுபிடித்தார் தாத்தா.

 பயந்து நடுங்கிக் கொண்டிருந்த போது தாத்தா என்னிடம் ஒரு காரியத்தை குறிப்பிட்டார். எப்போதாவது நாம் நம்மை தேடுபவர்களுக்கு ஒரு குறிப்பை உணர்த்த வேண்டுமானால் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை அவர்கள் உணருமாறு செய்யவேண்டும். நீ புரிந்து கொள்கிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால் எப்போதாவது இவ்வாறு வழி தப்பி போய்விட்டால் பதட்டம் அடையாமல் கிளைகளை அல்லது ஏதாவது துணி அல்லது பொருள் இருந்தால் அதை சிறிது இடைவெளிவிட்டு போட்டுக் கொண்டே சென்றால் உன்னை தேடி வருகிறவர்கள் உன்னை எளிதாக கண்டு கொள்வார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

ஓ.... ஆனால் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

இருக்கிறது தாத்தா... இதை பாருங்கள்... சிறு சிறு இடைவெளிவிட்டு காட்டப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம் கோடுகளால் மாநிலங்கள் மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தமிழ்நாடு மட்டும் வித்தியாசமாக காட்டப்பட்டிருக்கிறது. அதாவது கோடுகள் இடைவெளி விட்டு போடப்பட்டு இருக்கிறது. அதனால் நிச்சயம் இந்த குறிப்பு இந்த தமிழ்நாட்டில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் குறிக்கிறது தான் என்று சொல்ல அவரோ எனக்கு புரியவில்லை தான்... ஆனாலும் உன்னுடைய புத்திக்கூர்மை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என்றார்.

 சரி தாத்தா இப்பொழுது எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்.

உதவியா... நான் என்னசெய்யவேண்டும் குயிலி. நிச்சயம் செய்கிறேன்.

 உங்களுடைய செல்போனை என்னிடம் நீங்கள் தரவேண்டும்.

எதற்குமா... உன்னிடம் தான் பெரிய போன் இருக்கிறதே. அப்புறம் இந்த சிறிய போனை வைத்து என்ன செய்ய போகிறாய்.

எனக்கு தேவை உங்கள் ஃபோன் இல்லை தாத்தா.  உங்களது சிம்கார்டு. ஏனென்றால் என்னுடைய சிம் கார்டு மூலமாக அதில் வரும் நெட்வொர்க்கை வைத்து நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று எதிரிகள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் என்னுடைய நம்பரை ஆஃப் செய்துவிட்டு உங்களுடைய நம்பரை வைத்துக்கொண்டு அடுத்த வேலைகளை செய்ய வேண்டும் என்று குயிலி சொல்ல தாத்தாவும் அவளது செல்லை குயிலிடம் தந்தார்.

தன்னுடைய சிம்கார்டை வெளியே எடுத்துவிட்டு தாத்தாவின் சிம்கார்டை போட்டவள் அதற்கு தேவையான வசதிகளின் செய்துகொண்டு கூகுளில் சென்று தமிழ்நாட்டின் கிராமங்கள் என்று டைப் செய்து தேட ஆரம்பித்தாள். ஆனால் அவளுக்கு எந்த ஒரு க்ளுவும் கிடைத்த மாதிரி தெரியவில்லை... சற்று நேரம் யோசித்தவள் அந்த வரைபட குறிப்பு புத்தர் சிலை இருப்பதை

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.