(Reading time: 12 - 24 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

கூட்டிலிருந்து வெளியில் தனியாக  வந்திருக்கிறாள்....  அதுவும் தனக்கு மிக முக்கியமானவர் ஆபத்திலிருக்கும்போது....   அவளால் பக்குவமாக எதையும் யோசிக்க முடியவில்லை...   பயிற்சியாளர் கேட்ட கேள்விக்கும் அவளால் விடையளிக்க முடியவில்லை...

அடுத்து கோச் என்ன சொல்லப்போகிறாரோ இந்த அக்கா ஏன் இப்படி ஒரு பதிலும் கூறாமல் நிற்கிறாள் என்று அச்சத்துடன் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்   துளசி...

பயிற்சியாளரின் கேள்விக்கு மைத்தியால் ஒழுங்கான பதில் கூற முடியவில்லை...  தான் சரியாக பந்து வீசியதாகவே கூறினாள்...  அவளை பொறுத்தவரை பன்னிரண்டு ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை எடுத்தது சிறந்ததே.... ஏன் குறை கூறுகிறார்கள் என்றே புரியவில்லை...

அனைவரும் கடைசி ஓவரே தோல்விக்கு காரணம், அதுவும் மைத்தி பொறுப்பில்லாமல் பந்து வீசியதே காரணம் என்று கூற இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதுபோல் பார்த்தாள் மைத்தி....

ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருமே மைத்தியை குறை கூற, பதில் சொல்ல முடியா நிலையில் இருந்தாள் மைத்தி...

“கோச் எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு புரியலை... நான் நல்லாத்தான் பால் போட்டேன்... எங்கயும் மிஸ் பண்ணி நிறைய ரன் கொடுத்தா மாதிரி நியாபகம் இல்லை...”, மைத்தி கூற அனைவரும்  தவறும் செய்துவிட்டு அதை நியாயப்படுத்தவேறு செய்கிறாளே என்று அவளை  கோவத்துடன் பார்த்தனர்...

இவர்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பேச நடுவில் ஒரு பெண் எழுந்து பயிற்சியாளரிடம் இறுதியாக ஆட வந்த வீராங்கனை மைத்தியின் அருகில் சென்று பேசினாள் என்றும் அதன் பிறகே மைத்தி பந்து வீசும் முறை மாறியது என்றும் கூற அனைவரும் அதிர்ந்து மைத்தியை  பார்த்தார்கள்...

கிரிக்கெட்டில் சூது என்பது காலம் காலமாக இருப்பது...  அதில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதித்த போதும் அது தொடர்ந்த படியே உள்ளது....  இங்கும் அனைவரும் மைத்தியும் அப்படி ஏதேனும் விஷயத்தில் ஈடுபட்டுள்ளாளா என்று அவளை பார்த்தனர்....  

மைத்தியின் மீது வைத்த குற்ற சாட்டிலிருந்து அவள் மீண்டு வருவாளா... அவளின் பதில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா...  இல்லை இந்த போட்டியில் செய்த பிழைக்காக அடுத்தடுத்த போட்டியிலிருந்து விலக்கப்படுவாளா பார்க்கலாம்....

தொடரும்

Next episode will be published on 11th Nov. This series is updated weekly on Wednesday mornings.

Go to Kanavu Meippadum story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

8 comments

  • Thanks for your comments AdharvJo... Yes naama easyaa win or loose criticize pannittu porom... aanaal atharku pinnaal indha maathiri vishayangalum irukkalaam.... Anand accident is not a planned one...
  • Interesting update Jayanthi ma'am 👏👏👏👏👏 off-screen la ena nadakudhunu theriyadha bodhu audience oda disappointment eppadi irukkumo andha feel varavachitinga 👌 certainly considering her age and exp idhu konjam tough call thaan at the same orutharala motha team tholvi sandhicha eppadi irukkumnu strong aga portray seithu irukinga :hatsoff: by any chance Anand oda accident yum planned one aga irukumo??? I wish mythri come with sportsmen spirit n chase the opponents :yes: let us see how she will face the scene.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.