(Reading time: 12 - 24 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

அனுமதியில்லை என்று மறுத்துவிட்டார்...    தந்தைக்கு என்னவாயிற்றோ என்ற பதற்றத்துடனே ஆட்டத்திற்கு சென்றாள் மைத்தி...

இந்தியா முதலில் பந்தடித்தது... ஐம்பது ஓவர்களில் நூற்றி எண்பது  ஓட்டங்கள் எடுத்திருந்தனர்....  துளசி  அரை சதம் அடித்திருந்தாள்....  அடுத்து மட்டையடிக்க இங்கிலாந்து களம் இறங்கியது... முதல் பத்து ஓவர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் வீச அடித்து ஆடிய இங்கிலாந்து வீராங்கனைகள் விக்கெட் இழப்பின்றி  நாற்பத்துமூன்று ரன்கள் எடுத்திருந்தனர்....

பதினொன்றாவது ஓவர் வீச மைத்தி வந்தாள்....  எந்த வித எதிர்மறை சிந்தனையுமின்றி  பந்து வீசுவதை மட்டுமே நினைத்து விளையாடுமாறு கூறி துளசி உற்சாகப்படுத்தினாள்...

மைத்தியும் சிறிது நேரம் தன் சிந்தனைகளை ஒதுக்கி பந்து வீச ஆரம்பித்தாள்....  எப்பொழுதும் வீசும் அளவு திறன் இல்லாவிடினும் ஓரளவு நன்றாகவே பந்து வீசி ஒரு ரன்னை மட்டுமே அந்த ஓவரில் கொடுத்தாள்...

இப்படியாக அடுத்தடுத்த ஓவர்கள் முடிய நாற்பத்தெட்டாவது ஓவரில் இங்கிலாந்து எட்டு  விக்கெட் இழப்பிற்கு நூற்றி எழுபது ரன்கள் எடுத்திருந்தது... இதில் மைத்தி ஒன்பது ஓவர்கள் பந்து வீசி வெறும் பன்னிரண்டு ஓட்டங்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாள்....  மைத்தி பந்து வீச சென்ற ஒவ்வொரு  முறையும் துளசி அவளருகில் சென்று உற்சாகப்படுத்தி வேறு எந்த சிந்தனையும் இல்லாது செய்தாள்...   நாற்பத்தொன்பதாவது ஓவரை வீச மைத்தியை அணித் தலைவர் அழைக்க அவளும் சிந்தையை ஒருமுகப்படுத்தி பந்து வீச ஆரம்பித்தாள்...

முதல் பந்திலேயே  ஸ்டம்ப் தெறிக்க அவுட் ஆனார் எதிரணி வீராங்கனை.... புதிதாக வந்த வீராங்கனை மட்டையடிக்க மைதானத்தில் மைத்திக்கு அருகில் நடந்தபடி அவள் காதருகில் சென்று மைத்தியின் தந்தை கவலைக்கிடமாக இருப்பதாக கூறி செல்ல மைத்தியால் தாங்கவே முடியவில்லை....   அதன் பின் அவள் சிந்தனையை தந்தை ஆக்கிரமிக்க அடுத்த பந்தை ஏனோ தானோவென்று போட ஆறு ரன்கள் பறந்தது.... அதற்கடுத்த பந்தும் அப்படியே....  அதுவும் சிக்ஸர்...

அதுவரை இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்க  மைத்தி வீசிய பந்தால் வெற்றி இங்கிலாந்தின் வசம் சென்றது....  சக வீராங்கனைகளால் மைத்தியின் இந்த செயலை நம்பவே முடியவில்லை... அதுவும் துளசி வாயடைத்து போய் நின்றுவிட்டாள்....

Field செய்துவிட்டு பந்தை போடுபவரிடம் கொடுக்கும்போது  எப்படி இலகுவாக வீசுவார்களோ  அப்படி இருந்தது மைத்தியின் பந்து வீச்சு...  அனைவருமே மைத்தியை ஒரு வித அதிருப்தியுடனே பார்த்தனர்....

ஆனால் மைத்திக்கு இது எதுவும் கவனத்தில் இல்லை... உடனடியாக வீட்டிற்கு அழைத்து தன்

8 comments

  • Thanks for your comments AdharvJo... Yes naama easyaa win or loose criticize pannittu porom... aanaal atharku pinnaal indha maathiri vishayangalum irukkalaam.... Anand accident is not a planned one...
  • Interesting update Jayanthi ma'am 👏👏👏👏👏 off-screen la ena nadakudhunu theriyadha bodhu audience oda disappointment eppadi irukkumo andha feel varavachitinga 👌 certainly considering her age and exp idhu konjam tough call thaan at the same orutharala motha team tholvi sandhicha eppadi irukkumnu strong aga portray seithu irukinga :hatsoff: by any chance Anand oda accident yum planned one aga irukumo??? I wish mythri come with sportsmen spirit n chase the opponents :yes: let us see how she will face the scene.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.