"ப்ச்… அதுக்கு நீதான் காரணம்… என்னுடைய கனவில் வந்து தொல்லை செஞ்சது தப்புதானே… என்னுடைய மன உறுதியை குலைத்து விடாதா.."
"நான் வந்தேனா… அப்படினா ஏற்கனவே உங்க மனசு கெட்டு போச்சுன்னுதான அர்த்தம்"
"நோ ஹனி… அது கெட்டு போகலைம்மா.. சரியாதான் நினைச்சிருக்கு.. இந்த மீரா ரேச்சல் க்ளட்ச் தெரியாமல் தப்பாக நினைச்சேன். அதனால நானே எனக்கு சில விஷயங்களை கற்பித்து கொண்டேன்.. மீரா குட்… இந்த ரேச்சல் வாயாடி… சண்டைகாரி…"
"ஆனால் நான் அப்படித்தான் இருக்கிறேன்."
"அதை துணிச்சல் என்றும்… மனதில் ஒளித்து வைக்காமல் பேசுவது என்றும் சொல்லாம்."
" ஆஹாங்… தரையில பல்டி அடிச்சு பார்த்திருக்கேன் தண்ணீர்ல பல்டி அடிக்கறதை இப்பதான் பார்க்கறேன்…" அவள் உதட்டில் புன்னகை ஒளிந்து கொள்ள முயற்சித்தது.
"பல்டியும் இல்லை கில்டியும் இல்லை. அப்போ நீதான் என் மீரான்னு எனக்கு தெரியாது. உன் பக்கம் மனம் சாயக்கூடாதுனு நினைச்சேன்"
"அப்படியா… அப்புறம் இந்த தனு விஷயம்…"
"அது உன்னுடைய பாதுகாப்பிற்காகத்தான்… உன்னையும் என்னையும் சேர்த்து வைத்து யாரும் தவறாக பேசக் கூடாது என்று நினைத்தேன்" என்றவன் அன்று நடந்தவற்றை விளக்கினான்.
"நீங்க மீராவை மறந்துட்டீங்கனு நினைச்சேன்"
ரேச்சலை விலக்க நினைத்து நெருங்கியதை சொன்னான்… மின்னி மோள் வைத்து அவளை கண்டுபிடித்ததை விளக்கினான். மீரா இறந்து விட்டாள் என்பதை கேட்டு மன அழுத்தம் ஏற்பட்டதை சொன்னான். இயல்பான நிலைக்கு வரவே ஆறு மாதங்களாகியதை சொன்னான்… அவற்றை கேட்ட மீரா விழிகளை விரித்தாள்.
"ரேச்சல்தான் என்னுடைய உண்மையான குணம் என்று புரிகிறதா… நான் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். என் மகளுக்கு முன்மாதிரியாக இருக்கணும்."
"நீ நீயாகவே இரு.. எனக்கு ரேச்சலையும் பிடிக்கும்… நேர்மையும் உண்மையும் மீரா ரேச்சல் இருவரிடமும் இருந்தது எனக்கு தெரியும்… அதைத்தான் நான் விரும்புகிறேன்."
"ஆனால் என்னுடைய இந்த முகம்…"
"உண்மை ரொம்பவும் அழகானது ரேச்சல்… நான் உன்னுடைய அருகாமையை விழிகளால் உணர்ந்தது இல்லை. மனதால் உணர்ந்திருக்கிறேன்… உண்மையான காதலில் ஆத்மாவின் ஸ்பரிசம் இருக்கும். அது என்றைக்கும் நம்மை வேறுபடுத்தி பார்க்காது." அவளை லாஃப்டில் இருந்து இறக்கினான்.
"இருந்தாலும் நடந்த அத்தனைக்கும் மன்னிப்பு கேட்டுக்கறேன்." அவன் சொல ல,