”என்ன மாமா என்னாச்சி ஏன் இப்படி உங்க முகமெல்லாம் வேர்க்குது” என அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவர் முகத்தையே பார்த்துப் பேசினான் ஹரிஹரன்.
”முதல்ல என் பெரிய பொண்ணுக்கு கல்யாணம் ஆகட்டும் அப்புறம் என் சின்ன பொண்ணுக்கு பார்க்கிறேன், இப்பவே நீ ஏன் அவசரப்படற, ஒரு வேளை என் பொண்ணுக்கு இந்த வீட்ல யாரையும் பிடிக்கலைன்னா நாங்க இங்கிருந்து போயிடுவோம் வேற இடத்தில சம்பந்தம் பார்ப்போம்” என அவர் சொல்லவும் ஒருமுறை யோசித்தான்
”ம் அதுக்கும் வாய்ப்பிருக்கு தீப்தியோட மாடர்ன் மனசுக்கு பிடிச்ச மாதிரி இங்க யாருமே இல்லையே அவள் முடியாதுன்னு போயிட்டா இவரும் போயிடுவாரு கூடவே லஷ்மியும் போயிடுவாளே என்ன செய்றது இப்ப ம்” என பலமாக யோசித்தவன் அவரிடம்
”சரிங்க மாமா நீங்க சொல்றதிலயும் விசயம் இருக்கு தீப்திக்கு இங்க யாரையாவது பிடிக்கும் அப்புறமா அந்த டாக்டர் பேர் என்னன்னு அப்புறமா சொல்லுங்க இப்ப எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு நான் வரேன்” என சொல்லிவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியே சென்றான் ஹரி. அவன் சென்றதும் தான் கேசவனுக்கு மூச்சே வந்தது.
”அப்பாடி ஒழிஞ்சான், அந்த பொண்ணே யார்ன்னு தெரியலை அவள் எங்க தற்கொலை செஞ்சிக்குவாளோன்னு நானே பயப்படறேன், இந்த லட்சணத்தில இவன் வேற என் பொண்ணை விடமாட்டான் போலிருக்கே, தீப்தி சொன்னது சரிதான் இவன்ட்ட இருந்து அவளை காப்பாத்தறது எப்படின்னு இனிமேல நான் யோசிக்கனும், பேசாம 16 நாளுக்கு ஆஸ்பிட்டலுக்கு போகாம லீவு சொல்லிட்டு இங்கயே தங்கிடனும். அதான் சரி” என தன் செல்போனை எடுத்து அவசரமாக தன்னுடைய ஆஸ்பிட்டலுக்கு போன் செய்தார் கேசவன்.
வெங்கடேசனின் துணிக்கடைக்குள் வந்தான் ஹரிஹரன், என்றுமே அவன் அங்கு வந்ததில்லை இன்று அதிசயமாக வந்தவனைப் பார்த்த வெங்கடேசனும் அபியும் ஆச்சர்யப்பட்டனர்.
வெங்கடேசன் அவனிடம்
”என்னடா அதிசயமா இருக்கு கடைக்கு நீயெல்லாம் வரமாட்டியே”
”இப்ப அவசரம் அதான் வந்தேன்”
“என்ன விசயம் அப்பா என்னை கூப்பிட்டாரா” என வெங்கி கேட்க அதற்கு ஹரி
”அந்த வழக்கத்தைதான் என்னிக்கோ விட்டாரே”
”சரி நீ எதுக்கு வந்த”
“நான் அபியை பார்க்க வந்தேன் அந்த தீப்தி விசயமா பேசனும்”
என அவன் சொல்லவும் அபி கத்தினான்