வழி பண்ணி இருப்பாள்… இருக்கட்டும் இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை… சாயங்காலம் இருக்கு வானவேடிக்கை!
'ம்ஹும் அவங்கிட்ட பேச மாட்டேனு சபதம் எடுத்திருக்கேன்.. பேச மாட்டேன்… எதுவானாலும் ஃபேஸ் பண்ணுவேன்..'
முடிவெடுத்து உள்ளே தயக்கத்துடன் நுழைந்தாள்..
"ம்… ஒரு.முடிவிற்கு வந்தாச்சு போல.." மித்னின் குரலால் அவளை முழித்தாள்.
"யுத்தகளத்தில் நுழைவது போல ஒரு பாவனை முகத்தில் தெரிந்ததே… லுக்… நான் போலனுதான் சொன்னேன்… போலோனு சொல்லலை."
காதை அறுத்து தொங்க விடுவதில் அண்ணனும் தம்பியும் சளைத்தவர்கள் இல்லை போல…
"நோ சார்…"
"என்ன நோ…"
"யெஸ் சார்… "
"சரி அந்த ரிப்போர்ட்டை டீடெய்லா சொல்லுங்க…"
என்ன டீடெய்ல்… அதுதான் பார் சார்ட்… பை சார்ட்டெல்லாம் போட்டு வச்சிருக்கே.. பார்த்தாலே தெரியாதா..
"சார் என்ன டீடெய்ல்.."
"டொமஸ்டிக் வயலன்ஸ்… கணவன்.மனைவி தகராறு… என்ன ஆக்ஷன்… எத்தனை நாள்ல எடுத்தீங்க… கேஸ் க்ளோஸ் பண்ணது இதெல்லாம் சார்ட்ல க்ளியரா இருக்கு. ஆனால் இந்த மிஸ்ஸிங் கேஸ்கள் ஆக்ஷன்ஸ் ரொம்ப ஃபாஸ்டா இல்லையே…"
"சார்.. அது போன வருஷத்தைவிட இந்த வருஷம் குறைச்சிருக்கோம் சார்…"
"என்ன டெக்னிக் பயன்படுத்தினீங்க?"
"அது…"
"இந்த யாழினி மிஸ்ஸிங் இரண்டே நாள்ல சால்வ் ஆயிருக்கு… ஸ்கூல் கேர்ள் கேஸ் நான்கே மணி நேரத்தில் கண்டுபிடிச்சிட்டீங்க… இதேபோல நிறைய சீக்கிரமா சால்வ் ஆயிருக்கு… எப்படி?. யாராச்சும் வெளி ஆளுங்க ஹெல்ப் பண்ணாங்களா…"