எப்படி அழைப்பது என்னங்க இங்க பாருங்க ப்ளீஸ் என்று மனதில் புலம்பியவன். அவள் முகத்தைப் பார்க்க........ தைரியம் வரப்பெற்றவனாய்,
தர்ஷீம்மா... என்று அவள் தோளை தொட,
சடார் என்று பார்வையைத் திருப்பியவள் அவனை கண்டதும் அவள் கண்ணில் ஒரு ஒளி, ஏக்கம், தவிப்பு, சந்தோஷம் என்று அனைத்து வகை உணர்ச்சியையும் கண்களால் பிரதிபலிக்க முடியுமா??? இதோ என் தேவதையின் பார்வை அனைத்தையும் கூறுகின்றதே!!!
அவளுடைய தவிப்பை தன்னுடைய தவிப்பாக மாற்றியவன் கண்களாலே அவளுக்கு ஆறுதல் கூறினான்.
அவன் கைகளில் ஈரமாக உணர, குனிந்து பார்த்தவன் அது அவள் கண்ணீர் துளி என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தான்.
உடனே அவள் கையை இறுக்கமாக பற்றியவன் ப்ளீஸ் கண்ணை தொடைங்க தர்ஷீ எல்லாரும் பாக்குறாங்க.
அப்பொழுதுதான் தான் நிற்கும் இடம் அறிந்தவள். உடனடியாக கண்ணீரைத் துடைத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.
திரும்பி அவனைப் பார்த்தவள் என்ன இங்க இருந்து கூட்டிட்டு போயிட்டுங்க கதிர்.
அவன் அதிர்ச்சியாக அவளை நோக்க அவள் மீண்டும் கூட்டிட்டு போங்க ப்ளீஸ்,
சுற்றி முற்றி பார்த்தவன் அனைவரும் தங்களையே நோக்குவது போல் தோன்ற, பதற்றத்தில் அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
அவள் கையைப் பற்றி அவன் விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து பைக் நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்தான்.
அவளை பைக்கில் ஏற்றி அவன் நேராக சென்ற இடம் ஒரு உணவகம், அதன் முன் வண்டியை நிறுத்தி அவன் வண்டியை விட்டு இறங்கிய உடன் அவள் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றான். அந்த உணவகத்தில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் இருவர் மட்டும் தனியே அமர்வதற்கு கேபின் போன்ற அமைப்பில் டேபில் இருக்கும் அதன் கதவுகள் உள்ளே சென்றவுடன் மூடிக்கொள்ளும் அமைப்பில் இருந்தது. கதிர் ஒருமுறை நண்பர்கள் உடன் வந்திருந்த பொழுது இதைப் பற்றி தெரிந்து கொண்டான்.
அவளுடைய நிலையைப் பார்க்கும்போது அவளிடம் பேசிய தீர வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவளை அனைவருக்கும் காட்சி பொருளாக்க விரும்பவில்லை. அதனால் இங்கு அழைத்து வந்தான்.
அவன் வந்த நேரம் அந்த ஸ்பெஷல் கேபின் எல்லாம் நிறைந்து இருந்தது நொந்து போனான். இதுபோன்று கேபின் 5 மட்டுமே எழுதுவது இதில் ஒரு வேடிக்கை
Ungal adhangam than engal adhangamum madam ji
Kadhir oda proposal kk dharshu oda reaction was
Dil property matter therinjale kamalama ivangala accept panipangale....parkalam ena agimnu....too bad of her greedy relatives
interesting update ma'am 👏👏👏👏👏👏 look forward to read next update.
Thank you.
படிக்க சுவாரசியமா உள்ளதோடு, நடுத்தர குடும்ப வாழ்வில் ஏற்படும் துயரங்களையும் சொல்லியிருக்கிறீர்கள். பலே!