நம்மளும் கூட இருந்து முடிக்கலாம்னு வந்தோம் அக்கா. தனம் என்னோட பொண்ணு அதான் அவ கூட இருக்கணும்னு வந்தேன் "
"நல்லது அண்ணி , எங்களுக்கும் சந்தோஷம். நமக்கு வேண்டியவங்களுக்கு தான் விக்கறோம்ன்னு சந்தோஷமாயிருக்கு. "
"அம்மா, நம்ம சரஸ்வதி வீடு யாருக்காவது தெரியுமா அவளை உடனே பார்க்கணும், அவளை கூட்டிட்டு வரனும், யாராவது இருக்காங்களா?"
"நம்ம சரஸ்வதியா? உடனே நம்ம வீட்டு தோட்ட ஆள் சர்க்கரை இருக்கான், போக சொல்றேன்!"
"சர்க்கரை, எங்கடா இருக்க? சர்க்கரை! " அழைத்துக் கொண்டு போனார் கமலம்மா.
"இங்கே இருக்கேன்மா!" சர்க்கரை உள்ளே வந்தான்.
"இதோ பார், நம்ம சரசு வீட்டுக்கு உடனே போய், தனம் வந்திருக்குன்னு சொல்லி கூட்டிட்டு வா, அவசரம் உடனே போ."
"சரிம்மா!" உடனே ஓடினான் சர்க்கரை.
கொஞ்ச நேரத்தில் சரஸ்வதி வந்தாள்.
"என்னம்மா தனம் வந்திருக்காளா? "
'ஆமாம்மா, உள்ள வா உன்ன பார்க்கனும்னு சொன்னாம்மா."
"சரி!" உள்ளே சென்றாள் சரஸ்வதி.
சரஸ்வதி உள்ளே போன போது, தனம் அவளை பார்த்து எழுந்து வந்தாள், “ வா சரஸ்வதி, உன்னோட கொஞ்சம் பேசணும். இன்னிக்கே நாங்க ஊருக்கு போயிடுவோம் அதுக்கப்புறம் உன்னோட பேச முடியாது அதான் உன்னை உடனே பாக்கனணும்னு சொன்னேன். "
"அப்படி எண்ண முக்கியமான விஷயம் தனம்?"
"இல்ல சரசு, இப்ப உனக்கு எங்க வீட்டு தோட்டத்துல காய்கறி பழம் எடுத்து வித்து பணம் பண்ணிக்கோன்னு சொன்னேன் இல்லியா? அதே மாதிரி இப்போ வாங்கறோமே நிலம் அதே மாதிரியே பெரிய லெவல்ல செய்யலாம்னு திட்டம் அதை உன்னை வைத்தே பாத்துக்க சொல்லலாம்னு திட்டம், அதையும் நீ இங்கே இருக்க உன்ன மாதிரியே கஷ்ட படற பெண்களை வச்சு பண்ணனும். அதுதான் என் திட்டம், சரி எனக்கு ஒன்னு தெரியணும், இதை உன்னால செய்ய முடியுமா?"
"இது கொஞ்சம் பெரிய பொறுப்பு தனம், இன்னொரு நல்ல அனுபவசாலியா
இருந்தா பரவாயில்ல, நீ என்ன சொல்ற?"
"நானும் அதான் நினைச்சேன், சரி நான் சென்னைல யாராவது கிடைக்கறாங்களா பாக்கறேன் , "