(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

டாட் இது?"

"தேங்க்ஸ் அஜய்!"

"என்ன டாட் நான் உங்க பிள்ளைதான? எனக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிண்டு."

"சரி அஜய், இனி வாட் நெக்ஸ்ட்?"

"வாட் நெக்ஸ்ட்?.... அம்மா வந்ததுக்கு பிறகு பேசி பார்க்கணும் அதுவும் பாட்டிம்மாதான் பேசனும், ஏன்னா நிக்கத் பாட்டிம்மா கிட்ட மரியாதை அதிகம் அம்மாக்கு, அதனால அவங்க சொல்ற விதத்துல சொன்னா அம்மா மனசு மாறுவாங்கன்னு நினைக்கிறேன்."

"ஓ அப்படியா?"

"ஹ்ம்ம், மாஸ்டர் மேலேயும் மரியாதை அதிகம்தான் அதனால அவங்கள வச்சு பேசலாம், ஆனா முதல்ல நீங்க என் பெடரூம்ல  இருந்துங்கங்க, அவங்க பேசி முடிச்சு அம்மாவோட மனநிலை புரிஞ்சதுக்கு அப்பறம் வெளியே வாங்க, இல்ல நான் அவங்கள உள்ள அனுப்பறேன்."

"ஏண்டா உங்க அம்மா என்ன ஏத்துப்பாளா?"

"என்ன டாட் இது சின்ன குழந்தையாட்டம் கண்ணுல கண்ணீர்?"

"இல்லடா பயமா இருக்குடா, அவ என்ன ஏத்துப்பாளா?"

"ஏன் அப்படி ஒரு சந்தேகம்?"

"இல்லடா எனக்கு பயமாவே இருக்கு, அவ சின்ன வயசுலேயே பிடிவாதக்காரி!"

"அப்படியா, அம்மாவை பார்த்தா எனக்கு தெரியலையே? அப்போ நான் அம்மாவை சரியா புரிஞ்சுக்கலைன்னு நினைக்கறேன்."

"சரி சரி என் பீவியை நான் புரிஞ்சுட்டா போதும்."

"ஹ்ம்ம் ஜெலஸ் ?? பரவாயில்ல எனக்கு பெருமையா இருக்கு என் அம்மாவுக்காக என் அப்பா ஜெலஸ் ஆறது, டாட் கொஞ்சம் எனக்கு புரியற பாஷைல பேசுங்க சார் பீவின்றீங்க, வாப்பான்றிங்கே, அம்மீன்றீங்க?"

"சாரி சன், நாங்க அப்படித்தான் சொல்லுவோம், நாங்க இஸ்லாமிய குடும்பம் அதான் அப்படி பேசறோம்."

"பரவாயில்ல டாட், சும்மா உங்கள கலாய்ச்சேன், நான் ரெண்டு மதத்துக்கும் பொது டாட், அதனால இந்த எக்ஸ்ப்ளனேஷன்லாம் தேவையில்லை."

"அதுதான் காரணம்னு நினைக்கிறேன் அதான் உங்க அம்மா என்ன அவாய்ட் பண்ணறா, அதான் நான் கவலை படறேன்."

"எதுக்காக டாட் அம்மா உங்கள அவாய்ட் பண்றங்கன்னு நினைக்கறீங்க?"

"என் மதம்தான் காரணம், வேற என்ன இருக்க முடியும்?"

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.