(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

கூட அவன் குடும்பத்தோடு குடும்பமா சேர்ந்துடுவாங்க நிக்கத், நம்மள விட தனம் நம்ம குழந்தைகளை நல்லா வளர்த்துடுவா. அது கரெக்ட்தானே, அதனாலதான் சந்தோஷப்படறேன் நம்ம அபூக்கு இனி நல்ல காலம்தான்.. " என்று தன் மனதில் உள்ள சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்

"சரிங்க குழந்தைங்க வருவாங்க வீட்ல நானும் இல்லாம நீங்களும் இல்லாம பாவங்க அவங்களையும் கூட்டிட்டு போலாம் ஜாஃபர்"

"இல்ல நிக்கத் இப்ப வேணாம், அங்க என்ன சிச்சுவேஷன்னு தெரியாது. அபூ நம்ம வாங்கன்னு சொன்னா ஒரு வேளை தனத்துக்கும் அவனுக்கும் ஏதாவது பிரச்சனையோ என்னவோ, நமக்கு தெரியாது அவங்க ஒன்னு சேர்ந்ததும், பிறகு நாம குழந்தைகளை கூட்டிட்டு போலாம் சரியா?"

"சரிங்க. ஆனா, தனம் ஏம்பா பிரச்சனையை பண்ண போறா? அவ தங்கமான பொண்ணுங்க, அவதான் அவனுக்காக காத்திட்டிருந்தாள், பிறகு அவ ஏன் பிரச்சனை செய்ய போறா?"

"அது தெரியாது நிக்கத்து நாம நேர போய் என்னன்னு பார்ப்போம், பிறகு முடிவு செய்யலாம்."

"என்னங்க நான் ரெடியாயிருக்கேன், இல்ல நான் பெரிய கார்ல போயிடவா?"

"இல்ல நிக்கத்து நான் கிளம்பிட்டேன் இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல வீட்ல இருப்பேன், நீ ரெடியாயிரு!"

"சரிங்க, இப்பவே ரெடியாயிடறேன்."

"தனம் தன் வேலையை முடித்துக் கொண்டு, கண்ணம்மா வீட்டுக்கு சென்றாள். , கதவு திறந்துதான் இருந்தது, ஆனாலும் பெல் அடித்தாள், செல்வி தான் வந்தார். " அட, தனம்மா வாங்க !வாங்க!" பலமாக வரவேற்றார்.

குரல் கேட்டு கண்ணம்மா உள்ளிருந்து வந்தார் "வாம்மா தனம் வா! "

"ஆண்ட்டி, நான் ஜோசியர் கிட்ட போயிட்டு வந்தேன், மூன்று நாள் குறித்துக் கொடுத்திருக்கிறார், இதுல எது உங்களுக்கு சரிப்பட்டு வருமோ சொல்லுங்க?"

வாங்கி நாளெல்லாம் பார்த்தார் கண்ணம்மா , "இன்னும் ரெண்டு வாரத்துல ஒரு நல்ல நாள் இருக்கே ?'

"ஆமாம் ஆண்ட்டி!"

"அது உங்களுக்கு சரிபடுமா?"

"ஆண்ட்டி உங்க சவுகரியம் தான் முக்கியம், எங்களுக்கு ஒன்னும் ப்ராப்லம் இல்ல, என்ன கல்யாண மண்டபம்தான் கிடைக்கனும், இல்லேன்னா கூட அஜய் வீடு இருக்கு, அவன்கிட்ட சொல்லி ஒரு ஷாமியானா போட்டு செய்ஞ்சுடலாம் உங்களுக்கு ஒன்னும் ப்ராப்லம் இல்லேன்னா?"

"என்னம்மா? அஜய் உன் மகன் தான அவன் வீடுன்ற?"

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.