(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"ஓ, குட் கங்கிராட்ஸ் தனம், குட் லக் தனம், உங்க வாழ்க்கையில இனி சந்தோஷம் நிலைக்கட்டும்!"

"தேங்க்ஸ் சார், உங்க கிட்ட மட்டும் இத சொல்றேன் ஏன்னா நீங்க எனக்கு என் மகன் என்னோட சேர்றதுக்கு வழி பண்ணி கொடுத்திருக்கீங்க, அதானால் உங்களோட ஆசி வேணும் சார், கண்டிப்பா உங்க வீட்டுக்கு வரேன் சார்!"

"வாம்மா, என் ஒயிப்போட உன்ன ஆசிர்வதிக்கறேன்!"

"தேங்க்ஸ் சார்!"

"அப்துல் ரொம்ப நல்லவரா தெரியறார்மா, நீ நல்லாயிரு, நான் கிளம்பட்டுமா?"

"ஓகே சார், நான் நாளைக்கு முடிஞ்சா உங்க வீட்டுக்கு வரேன் சார்!"

" ஓகே, பை!"

லன்ச் டைம் அப்துல் தனத்தின் ரூமுக்கு வந்தான் "ஹை மை ஒயிப், லன்ச் போலாமா?"

அவளும் சிரித்துக் கொண்டே, " என்ன சார் வேலையெல்லாம் எப்படி இருக்கு?"

"வெரி குட், தனம். யு ஹவ் டன் எ குட் ஜாப்!"

என்ன?"

'என்ன வேலை பண்ணுன்னு ஃபோர்ஸ் பண்ணியே அதான், ஐ அம் எஞ்சாயிங் தி ஒர்க், அது மட்டுமில்ல ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கு தனம். தேங்க்ஸ், எதையோ சாதிக்க போற மாதிரி இருக்கு. "

"ஆமாம் ஆதூ, எப்பவுமே நமக்கு எதுல இன்டெரெஸ்டோ அத செய்யணும். “

"எஸ் யு ஆர் ரைட் , ஐ பீல் மைசெல்ப்!"

'தட்ஸ் குட் ஆதூ, இதுதான் எனக்கு வேணும்."

 

இரண்டு பேரும் டிபனை வரவழைத்து அங்கேயே சாப்பிட்டார்கள்.

சாப்பிடும்போதே, "ஆதூ, எனக்கு எப்படி நம்ம லைஃபை முடிவு பண்றதுன்னு தெரியல?"

"ஏண்டா?"

"இல்ல ஆதூ, நீங்க, சாய்ரா, இம்ரான் எல்லாம் உங்க அம்மா அப்பாவோடத்தான் இருக்கணும், பாவம் அவங்க இவ்வளவு வருஷமா ஒண்ணா இருந்துட்டு திடீர்னு பிரிஞ்சா, அவங்க பாவம் ஆதூ!"

"ஆனா நீயும் அஜயும் இவ்வளவு வருஷமா உங்க குடும்பமே இல்லாம கஷ்டப் பட்டீங்களே?"

"ஆதூ, எனக்கு உன்னோட கைவளைவுல நிறைய பேசணும் இப்போ நாம ஜஸ்ட் உன்னோட வேலைய பத்தி மட்டும் பேசலாம்!"

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.