(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

குடும்ப விஷயத்த பேசிட்டிருக்கீங்க!“

“என்ன ஆதூ, உங்க குடும்ப விஷயமா…..?”

"பின்ன, என்ன உங்க குடும்பதுல ஒருத்தனாவே நினைக்கலியே?”

“ஸாரி டாட் , மாஸ்டர் ஆக்டிங்கு ஆஃபர் இருக்குன்னாரு, எனக்கு ஒரு ஹாஸ்பிடல் கட்டனும்னு  ஆசை டாட், அதுக்கு தான் ஆஃபர ஏத்துகிட்டேன் டாட்!”

“குட், ரொம்ப சந்தோஷமா இருக்கு, இவ்வளவு பொருப்பான மகன், இல்ல தனம், அஜய் உனக்கு எவ்வளவு பணம் வேணும்?”

“இல்ல டாட், எனக்கு பணமெல்லாம் வேணாம். அப்பறமம், அம்மா சுரேஷ் வீட்ல இன்னிக்கு பிரண்ட்ஸ் எல்லாம் கெட் டுகெதர் அங்கேயே எல்லோரும் தங்கிட்டுவோம்,, நான் போகட்டுமா?”

“ஏன் அஜய், இவ்ளோ பெரியவனாயிட்ட இதல்லாம் உங்க அம்மாவ கேட்டு செய்யற?”

"இப்ப எனக்கு கேக்கறதுக்கு அம்மா இருக்காங்க, நான் சின்ன பையனா இருக்குறப்போ இந்த மாதிரி அம்மா அப்பான்னு இருக்காங்களா கிடைப்பங்களான்னு ஏங்கி இருக்கேன், இப்போ கிடைச்சப்போ அதை எப்படி பாதுகாக்கணும்னு நினைக்கறேன். அதனால ஒவ்வொண்ணும் அம்மாவை கேட்டு செய்யணும்னு முடிவு பண்ணேன் டாட், எல்லாம் சின்ன வயசுலயே கிடைச்சா அதனோட வால்யூ தெரியாது டாட், என்ன மாதிரி ஏங்கினவங்களுக்கு மட்டும்தான் தெரியும்."

"சாரிடா, நானும் ஏதோ விளையாட்டாத்தான் சொன்னேன், சாரி ராஜா!"

"என்ன டாட், இதுக்கெல்லாம் போய், என் மனசுல இருக்கறத சொன்னேன் அவ்வளவுதான்."

அதற்குள் தனத்தின் கண்கள் குளமாயின, அதைக் கண்ட அப்துல், " ஆமாம் அஜய் உங்க அம்மா இன்னிக்கு ரொம்ப அழகா இருக்காயில்ல?"

"எங்க அம்மா எப்பவுமே அழகுதான் டாட், இன்னிக்கு என்ன புதுசா, இல்ல மாம்" அவள், அவர்களுக்கு தெரியாமல் கண்ணை துடைத்துக் கொண்டு புன்னகைத்தாள், " சரி அஜய், சுரேஷ் வீட்டுக்கு போனோம்னு சொன்னியே போயிட்டு வா கண்ணா! "

"டாட் நீங்க என்ன சொல்றீங்க?"

"ஹேய் என்னடா, என்ன போய் கேட்டுட்டு, நான் இன்னிக்கு வந்தவண்டா, எனக்கு இவ்வளவு மரியாதையெல்லாம் வேண்டாம்."

"ஏன் டாட், என் டாடுக்கு நான் கொடுக்க வேண்டிய மரியாதையை கண்டிப்பா நான் கொடுப்பேன்."

"ஐ அம் ஸோ பிலெஸ்ட்! "

"வி ஆர்  ஸோ பிலெஸ்ட் தனம்!" அப்துல் கண்ணீர் துளியுடன் கூறினான்.

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.