(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

வந்தபோது "அக்கா ரொம்ப அழகாக இருக்கீங்க, நீங்க சாதாரணமா அலங்காரம் செய்திருந்தாலும் ரொம்ப அழகாயிருக்கீங்க, சினிமா ஆக்டர் போல இருக்கீங்க."

"ஏய் சும்மா இரு ரொம்பத்தான் புகழற."

"ஐயோ அக்கா உன் அழக புகழ்ந்தாலும் தப்பில்ல, நீ நிசம்மா நல்ல அழகு, நீ மட்டுமில்ல மாமா, அஜய் எல்லாருமே நல்ல அழகுதான்." கதவு தட்டும் ஓசை கேட்டது , "யாருன்னு போய் பார்?" பார்வதி கதவை திறந்தாள், அங்கு சாய்ரா நின்றுக் கொண்டிருந்தாள்.

 தனம் வந்து எட்டிப் பார்த்தாள் "அடடே, சாய்ராவா வாங்க!"

"உங்கள கூட்டிட்டு போலாம்னு வந்தேன், நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க!"

"உங்களை விடவா?, எங்க சாய்ரா எவ்வளவு அழகு?" என்று திருஷ்டி கழித்தாள் தனம், சாய்ரா வெட்கபட்டது.

"சரி நான் ரெடி நீங்க ரெடியா சாய்ரா?, இருங்க நான் இதை உங்களுக்கு போட போறேனாம், நீங்க சமர்த்தா இதை போட்டுக்குவீங்களாம்" என்று அஜய் வாங்கி வந்த நகையை போட்டு விட்டாள், பிறகு அந்த குழந்தையின் கையை பிடித்து கொண்டு கீழே இறங்கி போனாள், தனம்.

வைத்த கண் வாங்காமல் எல்லோரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர், அஜய் அவள் அருகே வந்தான், "மை பியூடிபுல் மாம், இன்னிக்கு உன் பியூட்டி இன்னும் அதிகமா இருக்கே அதுக்கு என்ன காரணமோ?"

"ஏய் வாலு,சும்மா இருடா, இங்க பாரு இந்த ஏஞ்சல?"

"இந்த ஏஞ்சல பாக்கறதா, இல்ல இந்த ஏஞ்சல பாக்கறதா? ஐயோ ஒன்னும் புரியலையே? " என்று நாடகம் ஆட்டினான்

"பிக் டிராமா கிங், சும்மா இருடா!"

"சரிம்மா!" என்று அவளை அனைத்துக் கொண்டு போனான்,

"க்க்ம்..." என்று கனைத்தான் அப்துல்.

"என் மனைவியை நான்தாண்டா அணைக்கணும் நீ ஏண்டா என்னோட போட்டி போடற?"

"மிஸ்டர், அவங்க என் அம்மா, நீங்க இப்பதான் ஹஸ்பண்ட், இன்னும் தாலி கட்டல அதுக்குள்ளே போட்டீன்றீங்க , நீங்கதான் என்னோட போட்டி போடறீங்க!"

"சாரிங்க இனி தாலி கட்டி முடிக்கற வரை நீங்களே சொந்தம் கொண்டாடுங்க போனா போறது..." என்று நக்கலாக  பதில் கொடுத்தான் அப்துல் .

தனம் இவர்கள் பேச்சை எஞ்ஜாய் செய்துக் கொண்டிருந்தாள், "ரெண்டு பேருக்கும், அப்பா, மகன்றது ஞாபகம் இருக்கா?"

"எஸ் மேடம் !" அப்துல் கூறினான்.

ஹாய் சாய்ரா எப்படியிருக்கீங்க, அம்மீயோட இருக்கீங்களா? அப்துல் பாசத்தோடு குனிந்து

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.