தனத்துக்கு வேலை ஓடவில்லை, தன் மேனேஜரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு போகலாம் என்று அவர் ரூமிற்க்கு சென்றாள், கதவை தட்டி "மே ஐ கம் இன்?" அவர் நிமிர்ந்து பார்த்து விட்டு," வாங்க தனலட்சுமி மேடம் , நானே உங்கள கூப்பிடணும்னு நினைச்சேன், நீங்களே வந்துட்டீங்க!"
"என்ன சார் ஏதாவது முக்கியமான விஷயமா?"
"அது இருக்கட்டும், நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க மேடம் ?"
"நீங்க சொல்லுங்க சார், ஏதோ முக்கியமா பேசணும்னு.....?"
"இல்ல நீங்க சொல்லுங்க?"
"ஒன்னும் இல்ல சார் எனக்கு கொஞ்சம் தலை வலியா இருக்கு, நான் வீட்ல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு லாகின் பண்ணறேன்னு சொல்லத்தான் வந்தேன்!"
"ஓ தாராளமா பண்ணுங்க, ஆனா அதுக்கு முன்ன கங்கிராஜுலேஷன்ஸ் மேடம் உங்களுக்கு மேனஜரா ப்ரோமோஷன் ஆகியிருக்கு, அதாவது என்னோட இடம்! "
"சார் என்ன சொல்றீங்க அப்ப நீங்க முரளி சார் ?"
அவர் புன்னகைத்துக் கொண்டே, "எனக்கு பெங்களூருக்கு ட்ரான்ஸ்பர் ஆகியிருக்கு!"
"ஓ, தேங்க்ஸ் சார்! ஆனா, உங்களோட ட்ரான்ஸ்பர் உங்களுக்கு சந்தோஷமா சார்?"
"கண்டிப்பா, ஏன்னா நான்தான் இந்த டிரான்ஸ்ஃபர்ரே கேட்டேன், என் பொண்ணுக்கு அங்க வேலை கிடைச்சிருக்கு அவளை தனியா விட இஷ்டமில்லை. அதான், நானும் அங்கயே இருக்கலாம்னு முடிவு பண்ணி அவங்க கிட்ட டிரான்ஸ்ஃபர் கேட்டிருந்தேன் அதான், அவங்க தான் என்ன ரீப்ளேஸ்ட்மென்ட்டுக்கு ரெபர் பண்ண சொன்னாங்க, நானும் உங்களைத்தான் ரெகமண்ட் பண்ணேன்."
"தேங்க்ஸ் சார்!"
"இதெல்லாம் எதுக்கு மேடம், நீங்க டிசெர்விங் கண்டிடேட், ஸோ நோ வொர்ரீஸ், குட் லக் தனலக்ஷ்மி மேடம்! "
"தேங்க்ஸ் சார், நீங்க எப்ப சார் ஜாயின் பண்ணனும்?"
"இன்னும் ஒரு வாரம் இருக்கும்மா, அதுக்குள்ளே உங்கள கொஞ்சம் ட்ரெயின் பண்ணிட்டு போகனும்."
"அப்ப நான் இன்னிக்கு போகல சார் நான் இருந்து இன்னிலேர்ந்து வேலையை கத்துக்கறேன் சார்."
"அதெல்லாம் ஒன்னுமில்ல தனலக்ஷ்மி, உங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லை, ஈஸியா கத்துண்டுடுவீங்க,நீங்க இன்னிக்கு கிளம்புங்க நாளையிலிருந்து வேலைய