(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"அட நீங்க யாருங்க அவங்கள பத்தி பேச, நான் இருக்கேன் அவங்க வாப்பா, உங்க அக்கரைக்கு ரொம்ப நன்றி!" பட்டென்று போனை வைத்தான் .

அங்கே வந்த தனம், "என்ன ஆச்சு யார்கிட்டயோ கோவமா பேசிட்டிருந்த?"

"ஒண்ணுமில்ல, சரி நீ எங்க போயிட்ட இவ்வளவு நேரம், இல்ல நான் ஹால்லதான் இருந்தேன், பாட்டு கேட்டுட்டு இருந்தேன்."

"ஓ மேடம் இப்ப நம்ம முயுஸிக் ட்ரூப்ல சக்க போடு போடுறாப்ல?"

'ஓ சார் கிண்டலடிக்கறீங்களோ?"

"சே சே நான் கிண்டலாம் பண்ணல, படிக்கும்போது எவ்வளவு நல்ல பிரெண்டா இருந்தோம், படிப்பு, பாட்டுன்னு எல்லாத்த பத்தியும், பேசி சிரிச்சு பாட்டு பாடி ஒரு பட்டாம்பூச்சியைப்போல சிறகடித்து பறந்தோம் உனக்கு ஞாபகம் இருக்கா தனம் ?"

"அத மறக்க முடியுமா? அத மறக்க கூடாதுன்னுதான், நீ எனக்கு ஒரு அருமையான பரிசை கொடுத்திருக்கியே ஆதூ!" என்று கண்ணீர் வடித்தாள்.

"இது ஆனந்த கண்ணீரா, இல்ல வருத்த கண்ணீரா?" என்று அவள் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டு கேட்டான்.

"இது ரெண்டும் கலந்த கண்ணீர் ஆதூ!" என்று அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள், தனம்.

இருவரும் தங்களை மறந்தனர், தங்களின் சின்ன வயது கனவு அவர்கள்  நிலை குலைந்தார்கள்,தன் நிலையை மறந்தார்கள்.

விடி காலை எழுந்தாள் தனம், குளித்துவிட்டு வெளியே வந்தவள்,, அவனைத் திரும்பிப் பார்த்தாள், அப்துல் நல்ல தூக்கத்தில் இருந்தான் அதை பார்த்து தனக்குள்ளேயே சிரித்தாள், என் செல்ல ஆதூ, எங்க உன்ன பாக்கவே முடியாதுன்னு நினைச்சேன்டா, எப்படியோ கடவுள் உன்ன என் கண்ணுல காட்டிட்டாரு.

நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்.

என்றுமனதுக்குள் பேசுவதாக நினைத்து, வாயை விட்டு பேசிக் கொண்டு வெளியே சென்றாள்.

அவன் தூக்கத்திலிருந்து எழுந்து விட்டான், ஆனால் அவள் பேச ஆரம்பித்தவுடன் தூங்குற மாதிரி நடித்தான் அவள் பேசுவதை முழுதாக கேட்டான், அப்படியே பறக்கிற மாதிரி ஒரு பீலிங் அவனுக்கு.

அவள் காஃபீ போட்டு குடித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கேத்தி பக்தி பாடல்கள் பாடினாள், அதைக் கேட்டு அப்துல் எழுந்து குளித்து பூஜையறைக்கு வந்து அவள் பாடும் பாடல்களை தன்னை மறந்து கேட்டுக் கொண்டிருந்தான், என்ன அருமையான குரல் என்று அதை ரசித்துக் கொண்டிருந்தான், அவள் கண் திறந்து பார்த்த போது அவன் தன் பக்கத்தில் இருந்தான்,

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.