(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"என்ன ஆதூ இது?' என்று வெட்கப் பட்டுக் கொண்டே கூறினாள்.

"பாரடா உங்க அம்மீ வெட்கப் படறா? "

'ஹஹ டாட், என்ன நினைச்சீங்க எங்க அம்மாவையா கிண்டலடிக்கறீங்க?"

"சீ சீ, என் பீவி டா அவ, அவளை நான் கிண்டல் பண்ணா, அவ என்ன உன் வீட்ல இருக்க விடவே மாட்டா?'

"அது என்ன டாட் எப்பவும், உன் வீடு உன் வீடுண்ணே சொல்றீங்க, அப்பா நான் உங்க மகன் இல்லையா?"

"ஆமாம் அஜய், நான் உங்க அப்பாதான், ஆனா நீயா உழைச்சு சம்பாரிச்சு கட்டின வீடு அஜய், அதான் அப்படி சொன்னேன். இந்த வாப்பா உனக்கு பிரயோசனம் இல்லாதவன் அதான் அப்படி சொன்னேன்."

"என்ன டாட் இது இப்படி சொல்றீங்க? நீங்க என் டாட், நீங்க சம்பாரிச்சு வச்சுருக்கறது  என் சொந்தமாகாதா?"

"அது எப்படி இல்ல?"

"அதே மாதிரித்தான், என்னோட சம்பாத்தியம், என் சொத்து எல்லாம் உங்க சொத்தும் கூட புரிஞ்சுதா?"

"சரிங்க சார் !"
"சரி, சார் மோரெல்லாம், நீங்க எங்களோட வறீங்களா?"
"ஆமாம் அஜய் அதான் சொன்னேனே உன்கிட்ட."
"சரி நான் வரலாமா? ஏன்னா, புது கல்யாண ஜோடியில்லையா?"
"ஆமாமில்ல, அப்ப நீ உன் கார்லயே போய்க்கோ, நானும் என் பீவியும் வரோம்!"
"அஜய் அங்க என்னடா கேள்வி, இருடா, நான் உன்னோட வரேன்."
"ஐயோ அம்மா நான் சும்மா அப்பாவை கலாய்ச்சேன், நானும் உங்களோட வரேன், ஏம்மா பாவம் அப்பாவை பயமுறுத்தறீங்க?"
"அந்த பயம் இருக்கட்டும், அது எப்படி உன்னை வரவேணாம்னு சொல்றாரு உங்க அப்பா?"
"யம்மா தேவதை, என்ன, நீங்க வாங்கன்னு சொல்லச்சேயே, மேடம்க்கு எவ்வளவு கோவம்னு தெரியுது. சாரி தனம், சும்மா விளையாடினேன். அவன் என்ன எனக்கும் மகன்தான, நீ என்ன எல்லாத்துக்கும் சீரியஸ் ஆற, எங்களை கொஞ்சம் எங்க போக்குல விடு."
'என்னம்மா அப்பாவும் நானும் இப்படி விளையாடறது முத முறையா? என்னம்மா?"
"சாரி சாரி, நானும் உங்க ரெண்டு பேர் மாதிரி கலாய்ச்சேன், எப்படி??"
"ஓ ஹோ!" என்று இருவரும் கோஷம் போட்டனர்.

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.