“அவங்க என் பேர பசங்க அப்துலோட பிள்ளைங்க."
"அப்போ அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா?"
"ஆமாம் தனம்மா!"
லட்சுமி தனத்தை பார்த்தார், அவள் தன் பெற்றோர்களை பார்த்தாள், வள்ளியை பார்த்த போது அவள் முகத்தில் இவளை நக்கலாக பார்த்தாள்.
"ஏன் நிக்கதம்மா, உங்களுக்கு தனத்தை ஏற்கனவே தெரியுமில்ல, அப்ப உங்களுக்கு தெரியாதா, உங்க மகன் தான் இதுக்கு காரணம்னு, அப்ப நீங்க தனத்துக்கிட்ட சொன்னீங்களா? அவளுக்கு தெரியுமா அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு?"
நிக்கத் தனத்தை பார்த்தார், தனம் அவர் உதவிக்கு வந்தாள்.
"அம்மா இது எங்க பிரச்னைம்மா நீ ஏன் இதல்லாம் தலையில போட்டுக்கற? எனக்கு ஏற்கனவே அவங்க மகனுக்கு கல்யாணம் ஆயிடுத்துன்னு தெரியும்மா!" என்று உண்மையை கூறினாள், என்ன அது தன்னோட அப்துல் என்பது அவளுக்கு தெரியாது, இருந்தாலும் நிக்கத்தை தன் அம்மாவிடம் இருந்து காப்பாத்தினாள்.
நிக்கத் அவளுக்கு பார்வையாலையே நன்றி கூறினார், ஆனால் இந்த கேள்விகள் அவளிடம் ஏற்கனவே இருந்தது, ஆனால் அவள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை, அவர்கள் தன் மகனை குழந்தையிலிருந்து நல்லபடி வளர்த்து கொடுத்திருக்கிறார்கள், கண்டிப்பாக அவர்களுக்கு ஏற்கனவே தன் மகன், அவர்கள் பேரன் என்று தெரிந்திருக்கிறது அதான் அவனுக்கு எல்லாம் செய்து அவனை இவ்வளவு அரவணைத்து வளர்த்திருக்கிறார்கள், இதுவே போதும் அவளுக்கு வேறு எதுவும் தெரிய வேண்டாம் .
"தனம் போய், புடவைய மாத்திக்க கொண்டு வாம்மா" நிக்கத்தான் கூறினார்
"சரிங்க ஆண்ட்டி!" என்று மாடி ஏறப் போனவளோடு பார்வதியும் வந்து சேர்த்துக் கொண்டாள் "அக்கா நானும் வரவா உங்களுக்கு ஹெல்ப் பண்ண?"
"நீ வா, ஆனா நான் என்ன ரெகுலரா பண்ற டிரஸ் தானே அதுக்கு ஹெல்ப் எதுக்கு?"
"ஏன்க்கா, உனக்கு இன்னிக்கு கல்யாணம், நல்லா டிரெஸ் பண்ணலாம்ல?"
"இல்லம்மா எனக்கு அதெல்லாம் வேண்டாம் பிடிக்காது."
அவர்கள் ரூமுக்கு போனார்கள், அவள் கதவை சாத்தி விட்டு கையிலிருந்த புடவை நகைகளை கட்டிலில் வைத்து விட்டு, அஜய் கொடுத்த புடவையை தேர்ந்தெடுத்தாள், அதற்கு மாட்ச் பிளவுஸ் எடுத்தாள், போய் குளித்துவிட்டு புது புடவையை கட்டிக் கொண்டு எப்பவும் போல் அலங்காரம் செய்துக் கொண்டு அஜய் வாங்கிய நகையை விட்டு நிக்கத் கொடுத்த நகை பெரியதாக இருந்தாலும் அவருடைய திருப்திக்காக போட்டுக் கொண்டாள், வெளியே