(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அவனுக்கு டி போட உள்ளே போன போது சுமதி வந்து ஏற்கனவே போட்டு முடித்திருந்தாள்.

"தேங்க்ஸ் சுமதி!"

"இதுக்கெதுக்கும்மா தேங்க்ஸ், என் வேலையைத்தான் செய்தேன்." அவள் புன்னகைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

"மேடம் தினமும் உங்க பாட்டை கேக்கறேன்தான், இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுசா கேக்கற மாதிரி இருக்கு. அதுமட்டுமில்ல, நாள் முழுக்க புத்துணர்ச்சியாவே இருக்கு மேடம். "

"தேங்க்ஸ் சுமதி, உனக்கு நல்ல மனசு அதான் நாள் முழுக்க புத்துணர்ச்சியாவே இருக்கம்மா, இப்படியே என்னென்னிக்கும் நீ இருக்கணும்னு அந்த கடவுளை வேண்டிக்கறேன்."

அவளும் புன்னகைத்து கொண்டே மத்த வேலையே பார்க்க ஆரம்பித்தாள்.

அப்துலிடம் டீயை கொடுத்தாள், அதை அவன் குடித்துக் கொண்டே "சூப்பர் குரல் தனம் உனக்கு, என்ன அழகா பாடின, உன் குரல் குழைந்து விளையாடிச்சு, ஓ மை காட் என்னால இன்னும் அந்த குரல் என் காதுலே இருக்கு தனம், முன்ன இருந்ததுக்கு உன் குரல்ல ஒரு மெச்சூரிட்டி இருக்கு, நோ ஒண்டர் வாப்பா உன்ன செலக்ட் பண்ணியிருக்காங்க."

"தேங்க்ஸ் ஆதூ, நீ ஏன் ரொம்ப எக்ஸ்சாஜூரேட் பண்ற, நீ அஜய் குரல கேட்கலையே அப்படியே மயங்கி நிற்போம் தெரியுமா, கண்ணனோட குழலிசைல எல்லாரும் மயங்குவாங்களாம் அதே மாதிரிதான், நம்ம அஜயோட குரலிலேயும் அப்படியே மயங்கிடுவோம், நிறைய தடவ நான் அவனை பாடாத கண்ணான்னுவேன். "

"ஏன் தனம்?"

"ஏன்னா, எனக்கு அவன் பாட்ட கேட்டா, எதுவுமே வேண்டாம் இங்கேயே இப்படியே இருக்கலாம்னு தோணிடும். ஆபிஸ் வேலைகூட பார்க்க தோணாது, அதுக்காகவே நீ பாடாத, நான் இல்லாதப்போ பாடுன்னுவேன், அவ்வளவு அழகா பாடுவான்."

"உன் மகன பத்தி பேசச்சே அப்படியே முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுது."

"ஆமாம் ஆதூ, அவன் என்னோட ரியல் சந்தோஷம் டா!"

"அப்ப நான்?"

"நீயெல்லாம் ஒன்னும் இல்லடா, அவன் தான் எனக்கு எல்லாம்?"

"என்னாலதானே அவன் உனக்கு கிடைச்சான்?"

"அது சரிதான், ஆனா நீ எங்க இருந்த எங்களுக்காக?"

"ஓ சாரி நான் ஆரம்பிச்சிருக்க கூடாது. ஆல்ரைட், நான் வாபஸ் வாங்கிக்கறேன், இனி கேட்கமாட்டேன்!"

"அவளும் சிரித்துக் கொண்டே, அப்படி வா வழிக்கு!" என்று அவனை ஒரு தட்டு தட்டி விட்டு

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.