(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

நாள் வேணும் அங்கிள் ஏன்னா அவங்க இன்னும் விசால்லாம் எடுக்கணும் இல்லையா?"

"ஆமாம்பா, அதெல்லாம் எங்க ஏஜென்ட் பார்த்துப்பாங்க, பேப்பர்ஸ் ரெடி பண்ண வேண்டியதுதான். நான் தனத்துக்கிட்ட இப்ப பேச முடியுமா?"

"நீங்க நாளைக்கு பேசுங்க அங்கிள், இன்னிக்கு நான் டாக்டர் கிட்ட கேட்டுட்டு உங்களுக்கு எவ்வளவு நாள்ல அம்மா சரியாவாங்கன்னு சொல்றேன்."

"சரிப்பா, உங்க அம்மா சொன்னது போல நீ ரொம்ப மெச்சியூர்ட், காட் பிளஸ் யு! "

"தேங்க்ஸ் அங்கிள், பை அங்கிள் நான் நாளைக்கு உங்களோட பேசறேன்."

போனை வைத்து விட்டு ஒரு பெரிய பாரம் இறங்கினது போல பீல் செய்தான். ஆனால் அம்மா ஒத்துக்கவேண்டுமே என்று இருந்தது . எப்படியும் தன் அம்மாவை கன்வின்ஸ் செய்து விட முடியுமென்று தீர்மானித்தான்.

 அடுத்த நாள், தனத்துக்கு ஃபோன் வந்தது. போஃனை எடுத்து பேசிய தனம், சந்தோஷமாக பேசினாள்.” சொல்லுங்க சார், நான் நல்லாயிருக்கேன் சார், நீங்க எப்படியிருக்கீங்க?”

“ நான் நல்லாயிருக்கேம்மா, உங்க உடம்புக்கு எப்படி இருக்கு?”

“ உங்களுக்கு எப்படி தெரியும் சார்?”

 

“நேத்து, அஜயோடு பேசினேன் அவர் சொல்லலியா? “

“ சொல்லலை சார்!"

“பரவாயில்லைம்மா, எனக்கு, இமீடியட்டா, உன்னை மாதிரி ஒருத்தர் சிங்கப்பூர் பிராஜெக்ட்டுக்கு தேவையா இருக்கு அதனால உங்களையே அங்க போக முடியுமான்னு கேக்கலாம்ன்னு தான் போன் பண்ணேன்.”

“சார், உங்களுக்கு தெரியும், இப்ப எனக்கு கல்யாணம் ஆயிடுத்து, அப்துலையும், அஜயையும் விட்டு என்னால எப்படி போக முடியும் சார்?”

“எனக்குத் தெரியும்மா, அங்க போனதும் உன் ஹஸ்பண்ட்டுக்கு ஒரு பிராஜெக்ட்டுக்கு ஏற்பாடு செய்யறேன், பை த வே, அஜய்க்கு இதுல சம்மதம், அவரே என்கிட்ட சொல்லிட்டாரும்மா, இனி உன் முடிவுதான் வேண்டும்”

“ நான், அப்துல்கிட்டேயும், அஜய்கிட்டேயும் பேசிட்டு சொல்லறேன் சார். எப்ப கிளம்பனும் சார்?”

“ சரின்னு சொன்னீங்கன்னா, உங்க உடம்புக்கு சரியான உடனே கிளம்பனும்!”

“ ஓகே சார்,  நான் அவங்ககிட்ட பேசிட்டு , உங்கள  கூப்பிடுறேன். தாங்க்ஸ் சார்!”

“தாங்செல்லாம் எதுக்கும்மா,  நான் உங்க போஃனுக்கு காத்துட்டிருப்பேன்.”

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.