(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

தனம், அஜயையும் தங்களுடன் வரச் சொல்லி கேட்டாள், ஆனால், அவனோ தாத்தா பாட்டியை

பார்த்துக்க நான் இங்க இருப்பேன்.". நான், என்னம்மா இம்ரான் மாதிரி சின்ன பையனா? நான் பெரிய பையன்மா, அது மட்டுமல்ல, என்னோட மெடிசின் இங்க படிக்கிறேன், திடீர்னு அத மாத்தல்லாம் வேணாம்மா. நான் அடிக்கடி வந்து உங்களையெல்லாம் பார்ப்பேன், என்னாலெல்லாம், உங்களை எல்லாம் பார்க்காமல் இருக்க முடியாதும்மா .”

“ நீ சொல்றது சரிதான் அஜய், ஆனா, உன்னை விட்டு என்னால் இருக்க முடியுமா தெரியில்ல?”

“எல்லாம் முடியும் மாம்மி, கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும், பிறகு எல்லாம் சரியாயிடும்…. ஆனா மாம், என் தங்கை பாப்பா பிறக்கும் போது, நான் அங்கத்தான் இருப்பேன்.”

“ அதெப்படி, அவ்ளோ‌ சரியா அந்த டைம்க்கு வருவ?”

“அது அப்படித்தான்…. நான் சரியா அங்க  இருப்பேன்.”

அவனை குனிய வைத்து, அவன் தலையில் முத்தமிட்டாள் “உன் கூடப் பிறந்தவர்கள் ரொம்ப குடுத்து வைத்தவர்கள், இப்படி ஒரு அண்ணன் கிடைக்க..” அவள் கண்களில் கண்ணீர் துளிகளை கண்டான் அஜய்.

“ மாம், உன் உடம்பை பார்த்துக்கோ,  அமெரிக்கால, உங்க ஏரியா ஜாப்புக்கு டைம் லிமிட்டே கிடையாது, லேட் அவர்ஸ்ல பண்ற மாதிரி இருக்கும்."

“ சரி கண்ணா,,  நான் பார்த்துக்கறேன்!"

"அம்மா கவலை படாதீங்க நான் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ண போறேன், என்ன மிஸ் பண்ணவே மாட்டம்மா."

"என் செல்லம் நீ அடிக்கடி வந்தா எங்களுக்கு தொந்தரவா?" என்று செல்லமாக கோபித்தாள் தனம்.

அவர்கள் எல்லோரையும் ஏர்போர்ட் வரை சென்று அனுப்பிவிட்டு இவர்களும் அடுத்த ஃபிளைட்டில் ஏறிவிட்டார்கள்.

சென்னைக்கு வரும் முன்னரே வழியில் ஜாஃபர் இடம் அஜய் ,அமெரிக்காவுக்கு விசாவிற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி  இருந்தான். ஜாபரும் மூவருக்குமே ஏற்பாடு செய்வதாக அஜயிடம் கூறினார்.

அடுத்த பதினைந்தாவது தினமே அவர்கள் மூவருடைய விசாவும் ரெடியாகிவிட்டது.

திடீரென்று அடுத்த ஒரு மாதத்தில் ஒரு நாள் அஜய்க்கு அவன் அம்மா நினைப்பு வந்து எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது, நிக்கத்துக்கு கால்  செய்து உடனே அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என்று கூறினான்.

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.