(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

விவரம் கூறினார். “ ஆமாம், நம்ம அஜய் இன்னிக்கு ரெக்கார்டிங்க்கு வந்தான், எல்லா விஷயமும் சொன்னான், வர வழியில நம்ம ஏஜன்ட்கிட்ட பேசினேன். நாளைக்கே ஏற்பாடு செய்யறேன்டாங்க.”

“சரி தனத்துக்கு ஃபோன் போடு”

தனம் பேசினுனாள்,  நிக்கத் ஸ்பீக்கரில் போட்டிருந்தார்.” தனம், அங்கிள் பேசனும்னாரு, இந்தாங்க பேசுங்க,” ஜாஃபரிடம் கூறினார் நிக்கத்.

“ ஸாரிம்மா தனம், நான் ரெக்கார்டிங்ல இருந்தேன், அதான் உன் ஃபோனை எடுக்கல ….. அஜயும், நிக்கத்தும் சொன்னாங்கம்மா, நான் ஏஜன்ட்கிட்ட சொல்லிட்டேம்மா , ரெண்டு நாள்ல ஏற்பாடு செய்யறேன்னு சொல்லியிருக்காங்கம.”

“ வெரி குட் அங்கிள், நீங்க எப்படி இருக்கீங்க?”

“எனக்கென்னம்மா? அபு எப்படியிருககான்?  உங்க ரெண்டு பேரையும் ரொம்ப மிஸ் பண்றோம்மா!”

“ ஆது, நல்லா இருக்கான் அங்கிள்.  நாங்களும், உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்றோம் அங்கிள். ஆது கிட்ட  பேசுங்க அங்கிள்."

“ இரும்மா, உன்னோட கொஞ்சம் பேசனும்.”

“ என்ன விஷயம் சொல்லுங்க அங்கிள்?”

“ சிங்கப்பூர் ஃபிரெண்ட் ஒருத்தர் ரொம்ப நாளா அங்க மியூசிக் புரோக்ராம் ஒன்று கேட்டுட்டிருக்காங்க, நாம் எல்லோரும் அங்கே இருக்கும் போது ஒரு ப்ரோக்ராம் கொடுக்கலாம்னு நினைக்கிறேன், நீ என்ன சொல்ற?”

“அங்கிள், நீங்க சொன்னா நாங்க மாட்டேன்னா சொல்லப்போறோம்!

“ அபுக்கிட்ட குடும்மா!"

அப்துலிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தார்.

அஜயுடன்,  இம்ரான், சாய்ராவுடன், நிக்கத்தும் ஜாஃபரும் சிங்கப்பூர் கிளம்பிச் சென்றார்கள்.

சிங்கப்பூரில், இறங்கியதிலிருந்து , குடும்பம் முழுவதும், சந்தோஷமும், குதூகலமாக இருந்தனர். லைட் மியூசிக் ரொம்ப நிறைய கூட்டத்துடன், வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

தனம், அப்துல், இம்ரான், சாய்ரா, நான்கு பேருக்கும் விசா, டிக்கெட் எல்லாம் ரெடி. எல்லோரும் அமெரிக்கா செல்ல தயாராகிவிட்டனர்.

ஜாஃபருக்கும், நிக்கத்துக்கும் அவர்கள் அமெரிக்கா போவதில் கொஞ்சமும் பிடித்த மில்லை, ஆனால் இப்போது இவர்கள் வெளி நாட்டில் இருப்பதே நல்லது என்று தங்களை சமாளித்துக் கொண்டனர்.

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.