(Reading time: 7 - 13 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 05 - முகில் தினகரன்

டேய் முரளி...புறாவெல்லாம் கீழே...அந்த பாறைக இடுக்குலதான் இருக்கும்!...அந்த இடத்துக்கு நாம போக முடியாது...அதனால இங்கிருந்தே பாறைக மேலே கல்லெறியலாம்...அப்ப புறாக்கள் வெளிய வரும்...பிடிச்சுடலாம்” என்றான் தனசேகர்.

“சரிடா!” என்ற முரளி “ஆனா...பிடிக்கும் போது ஜாக்கிரதையா பிடிக்கணும்டா!...கொஞ்சம் ஏமாந்தாலும் கீழே விழுந்திடுவோம்....” என்றான், கீழே பார்த்துக்கொண்டே,

“கிணத்துல சுத்தமா ஒரு சொட்டுத் தண்ணி கூட இல்லை போலிருக்கு!...சேறுதான் கண்ணுக்குத் தெரியுது” என்றான் தனசேகர்.

“சேறுதான் ஆனா....ரொம்ப ஆழம்...நாம விழுந்தோம்..அப்படியே உள்ளார போயிடுவோம்”

இருவரும் அவ்வப்போது தாங்கள் கொண்டு வந்திருந்த சிறிய கற்களை பாறை இடுக்குகளை நோக்கி எறிந்து கொண்டேயிருந்தனர்.

நீண்ட நேரமாகியும் ஒரு புறா கூட வெளியில் வரவில்லை.

“என்னடா இது...ஒண்ணு கூட வெளிய வர மாட்டேங்குது” சலித்துக் கொண்டு சொன்னான் தனசேகர்.

அப்போது, ஏதோ ஒரு பாறை இடுக்கிலிருந்து வெளிவந்த ஒரு பெரிய சைஸ் ஆந்தையொன்று “பட...பட”வென்று இறக்கையடித்துக் கொண்டு, இலக்கின்றித் தாறுமாறாய்ப் பறந்து தனசேகரின் முகத்தில் மோதியது.  அது இன்னதென்று புரியாமல், அனிச்சையாய் இரு கைகளாலும் முகத்தை மூடினான். 

கொடியைப் பற்றியிருந்த அவன் பிடி விடுபட்டதும் அப்படியே “தொபீர்”ரென்று கிணற்றுக்குள் விழுந்தான். 

உள்ளே மொத்தமும் சேறாயிருந்ததால், அடி ஏதும் படாமல் தப்பினான். ஆனால், அவனால் அந்த சேற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.  இடுப்பளவு சேற்றிலிருந்து வெளியேற கையையும் காலையும் நீச்சலடிப்பது போல் அடித்துப் பார்த்தான்.  அந்த அதீத அசைவுகளால் மேலும் மேலும் ஆழத்திற்குப் போனானே தவிர மேலே வரவே முடியவில்லை.

வழுக்கலும் எக்கச்சக்கமாய் இருக்க, தப்பிக்க வாய்ப்பேயில்லாமல் தவித்தான்.

“டேய்...முரளி...என்னைக் காப்பாற்றுடா...காப்பாற்றுடா” கத்தினான்.

“சேகர்...அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து...ஒரு ஓரத்துக்கு வந்து பாறையைப் பிடிச்சு மேலே வரப் பாருடா” கத்தலாய்ச் சொன்னான் முரளி.

“இல்லைடா!...லேசா அசைஞ்சாலும் கீழே போறேண்டா...ஏதாவது செய்டா...என்னைக் காப்பாற்றுடா!...நான் கொஞ்சம் கொஞ்சமாய் முழுகிட்டிருக்கேண்டா!” அபயக் குரலில்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.