(Reading time: 5 - 10 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

“ஹையோ... போதும்... கிளம்புங்க...! ஈவ்னிங் சீக்கிரம் வாங்க... என்னோட பைனாப்பிள் கிரேவியை நீங்க தான் முதல்ல சாப்பிடனும்...”

இந்த இம்சை வேறா? என்றுக் கேட்கப் போகிறான் என்று மஞ்சு எதிர்பார்க்க,

“பேரே வித்தியாசமா இருக்கே... சீக்கிரமே வரேன்...” என்று சொல்லி அவளின் உள்ளத்தை குளிர வைத்தான் மனோஜ்...

அவன் காரை நோக்கி செல்ல, மஞ்சுவும் அவனுடன் சென்றாள்.

“பை pbs...”

“ஹேய் மனோஜ் இன்னும் இந்த pbs என்னன்னு நீங்க சொல்லவே இல்லையே...??”

“அடுத்த சண்டை வரட்டும் pbs... அப்போ சொல்றேன்...”

மஞ்சு செல்லமாக முறைப்பதை கண்டுக்கொள்ளாமல் கை அசைத்தான் மனோஜ்...

மஞ்சுவும் பதிலுக்கு கை அசைக்க, காரை கிளப்பிச் சென்றான்...

வீட்டிற்கு திரும்பிய மஞ்சு, நேரத்தை பார்த்து விட்டு காலிங் கார்ட் பயன்படுத்தி துர்காவின் நம்பரை அழைத்தாள்.

துர்கா அழைப்பை ஏற்பாளோ என்னவோ என்று மஞ்சு யோசித்திருக்க, துர்கா இரண்டு ரிங்குகளில் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ துர்கா, நான் மஞ்சு பேசுறேன்...”

“ஹாய் மஞ்சு, எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் துர்கா. உங்க கிட்ட ஒரு இம்பார்டன்ட் விஷயம் பேசனும்... இப்போ உங்களுக்கு டைம் இருக்குமா???”

“நெக்ஸ்ட் மீட்டிங்குக்கு அரை மணி நேரம் இருக்கு மஞ்சு, சொல்லு, என்ன விஷயம்?”

மஞ்சு தான் வேலையை ராஜினாமா செய்ய முடிவு எடுத்திருப்பதை பற்றி மெதுவாக விளக்கினாள்.

துர்காவும் அவள் சொல்வதை அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தாள்.

“... அது தான் துர்கா, உங்க கிட்ட இப்போவே சொல்லிடலாம்னு பார்த்தேன்... நான் இந்த லீவ் முடிஞ்ச உடனே ரிசைன் செய்தாலும் நோட்டீஸ் பீரியட் இருக்குமா?? உடனே ரிலீவ் ஆக முடியுமா?” என மஞ்சு கேட்டு முடித்த பிறகும் துர்கா பதில் சொல்லவில்லை.

“துர்கா?” என மீண்டும் அழைத்தாள் மஞ்சு.

“என்னை என்ன பதில் சொல்ல சொல்ற மஞ்சு?” என்றுக் கேட்ட துர்காவின் பேச்சு தோரணை மொத்தமாக மாறிப் போயிருந்தது. அதற்கான காரணம் மஞ்சுவிற்கு புரியவில்லை...!  

தொடரும்...

Go to Pottu vaitha oru vatta nila - Part 02 story main page

4 comments

  • Manager sir already sketch pottu ippo execute panuraro :Q: :Q: <br />Nalla understanding and flexibility irundha ippadi easy adjust seithu Kittu pineapple gravy sapidalam pole 😁😜 😍😍😍 cute update bindu ma'am 👏👏👏👏👏👏👏👏 Mr M semma 👌 and avarukku ertha jodi mrs m :hatsoff: <br />Thank you

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.