(Reading time: 5 - 10 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

அமுதாவின் கேலி புரிந்து மீண்டும் சிரித்த மஞ்சு,

“அதுல என்ன உனக்கு சந்தேகம் வேண்டி இருக்கு?” என்றாள்.

“அதானே! திருவிழா கூட்டம் போல வீட்டுல அவ்வளவு பேர் இருக்கும் போதே உங்க ரொமான்ஸ் வேற ரேன்ஜ்ல இருந்துச்சு. இப்போ கேட்கவா வேணும்???”

தோழியின் கேலிப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்க மஞ்சுவிற்கு இனிக்க தான் செய்தது... ஆனால், காலிங் கார்ட் காலியாகி கொண்டு இருக்கிறதே!!!

மனோஜ் அவளிடம் ‘யாரிடம் பேசினாய்’, ‘என்ன செய்தாய்’ எனக் கேள்விகள் கேட்க மாட்டான், இருந்தாலும் மஞ்சுவிற்கு ‘காஸ்ட்லியான’ பேச்சை முக்கியமான விஷயத்தில் வைக்கத் தோன்றியது...

“அதை விடு அம்மு. நான் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன். அதைப் பத்தி பேச துர்காக்கு கால் செய்தேன். அவங்க ஹெச்.ஆர் கிட்ட பேசிக்கோன்னு சட்டுன்னு கட் செய்துட்டாங்க.”

“வேற என்ன செய்வாங்க, எல்லாம் அந்த குரங்கு நிர்மல் செய்த வேலையால தான் இருக்கும்.”

“நிர்மல் என்ன செய்தான்?”

“அவன் வேலையை ரிசைன் செய்துட்டான் மஞ்சு. அங்கே ஒரே கலாட்டாவா போச்சு! மனோஜ் எதுவும் சொல்லலையா??”

“இல்லையே? நிர்மல் ரிசைன் செய்துட்டானா??? எதுக்கு? அவனும் உன் கசின் ஹர்ஷினியும் லவ் செய்தது என்ன ஆச்சு??? இப்போ எதுக்கு ரிசைன் செய்தான்?”

“ஹர்ஷினிக்காக தான் ரிசைன் செய்தான். துர்கா டீம்ல நீயும் இல்லை, நானும் இல்லை, புதுசா இரண்டு ஃபிரெஷர்ஸ் போட்டு இருக்காங்க. ஆல்ரெடி அவங்களே டெலிவரபில்ஸ் கொடுக்க ஸ்ட்ரகில் செய்துட்டு இருந்திருப்பாங்க போல. நிர்மல் வேற ரொம்ப நாள் லீவுல இருந்தான். இப்போ சிச்சுவேஷன் சரி இல்லாதப்போ, இந்த குரங்கு போய் ரிசைன் செய்யப் போறேன்னு சீன் போட்ருக்கான். உனக்கே தெரியும் துர்கா வெரி குட் மேனேஜர். அவங்க பொறுமையா பேசி இருக்காங்க. இவன் அதெல்லாம் முடியாது ஆ’வுன்னு குதிச்சு, டி.எம்’க்கு எஸ்கலேட் செய்து, பெரிய பிரச்சனை ஆயிடுச்சு.”

“ஐயையோ.”

“ஹ்ம்ம்... அதான் உன் கிட்ட துர்கா அப்படி சொல்லி இருப்பாங்க. அவங்களும் பாவம் தான்.“

“ஹ்ம்ம்.... அப்போ நான் என்ன செய்றது??”

“உன் லீவ் எப்போ முடியுது மஞ்சு??”

“இன்னும் அஞ்சரை மாசம் இருக்கு...”

4 comments

  • Nice update bindu ma'am 👏👏👏👏👏👏 indha Nirmal innum series la irukara :eek: ;-) office pattri ella updates wife kk update kodukanuma??? Yenangapa idhu :Q: 🍍 gravy cancell paniduvangalo :Q: :D manager sir irukurappa no tension no bp...look forward to see what happens next.<br />Thank you.
  • Super update bindu 😇 <br />Kanavan manaivi eruvarukum etaiyil ulla kathal, kovam, varutham, santai, etc....... Ellathaium azhaka story la kontu varika nikal valkaiyil natakuramathiri iruku. <br />Waiting for your next update☺😇<br />Good luck🍀🍀🍀🍀🍀

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.