(Reading time: 5 - 10 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

“அண்ணே...தங்கவேலண்ணே!...நான் முரளி பேசறேன்” என்றான்.

“முரளியா?...எந்த முரளி?”

“அண்ணே “சூடாமணி ரைஸ் மில்”...முரளி!...நீங்க கூட கோயமுத்தூர்ல ரைட்டர் வேலையிருக்கு!ன்னு சொல்லி கார்டு குடுத்தீங்களே?”கத்தலாய்ச் சொன்னான் முரளி.

“ஓ...நீயாப்பா?” என்ற அந்த தங்கவேலு, “ஆமாம்..எப்ப வந்தே கோயமுத்தூருக்கு?” கேட்டார்.

“இப்பத்தாண்ணே வந்தோம்!...ரயிலை விட்டு இறங்கியதும்...ஆட்டோ பிடிச்சு நேரா உங்க டிரான்ஸ்போர்ட் ஆபீஸுக்கு வந்திட்டோம்”என்றான் முரளி.

“என்ன?...“வந்தோம்”...“வந்திட்டோம்”ன்னு பன்மைல சொல்றே?....எத்தனை பேர் வந்திருக்கீங்க?”

“அண்ணே!...நானு...அம்மா...தங்கச்சி...மூணு பேரும் அந்த ஊரை விட்டே வந்திட்டோம் அண்ணே”

“அடப்பாவி!...இப்படி திடீர்னு புறப்பட்டு வந்து நிற்கறியே?...இது என்ன கிராமமா?...டவுன்யா!...இங்கெல்லாம் மனுஷ வாழ்க்கையே வேற மாதிரியிருக்கும்!...”என்று சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதி காத்த அந்த தங்கவேலு, “சரி போனை அந்த செக்யூரிட்டியிடம் குடு” என்றார்.

முரளி மொபலை செக்யூரிட்டியிடம் நீட்ட, அதை வாங்கி, “ம்...சொல்லு தங்கவேலு” என்றார் அவர்.

“நாகராஜு...அவங்களை நம்ம ரவியோட ஆட்டோவுல ஏத்தி எங்க வீட்டுக்கு அனுப்பு” என்றார்.

“சரி...தங்கவேலு” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்த அந்த செக்யூரிட்டி, உடனே ஆட்டோ ரவிக்கு கால் செய்தார்.

“விர்”ரென்று வந்து ரவுண்டடித்து நின்றது அந்த ஆட்டோ.  “ரவி...இவங்களை...நம்ம தங்கவேலு அண்ணன் வீட்டுல இறக்கி விட்டுடு”என்றார் அந்த செக்யூரிட்டி.

“நிச்சயமாக...மூத்த சகோதரரே” என்று அந்த ரவி வித்தியாசமாகச் சொல்லி விட்டு, முரளியின் பக்கம் திரும்பி, “எல்லோரும் வாகனத்தினுள் ஏறி அமருங்கள் பயணிகளே” என்றான்.

“ஆஹா...இவன் ரவியா?....தமிழ்ப் பித்தனா?” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டே ஆட்டோவினுள் ஏறினான் முரளி. அவனைத் தொடர்ந்து அவன் தாயும் தங்கையும் ஏறிக் கொண்டனர்.

சுந்தராபுரம் பகுதியிலிருந்த அந்த வீட்டின் முன் ரவியின் ஆட்டோ நின்றது.

“பயணிகளே....நீங்கள் தேடி வந்த இல்லம் இதுதான்” என்றான் ஆட்டோ ரவி.

கேட்டிற்கு வெளியே காத்திருந்த தங்கவேலு, தானே ஆட்டோவிற்கான தொகையைக் கொடுத்து ரவியை அனுப்பி விட்டு, முரளியையும் அவன் குடும்பத்தையும் வீட்டிற்குள்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.