(Reading time: 7 - 13 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

ஆசையோட வந்திருக்கான்!...அட..அவன் யார் கூட வந்தா உங்களுக்கென்ன?.... “கூட வந்திருக்கறவன் என்ன சாதி?...அவன் ஏன் உள்ளே வந்தான்?...அவன் எதுக்கு சேர்ல உட்கார்ந்தான்?”னு தேவையில்லாத பேச்சைப் பேசி மாப்பிள்ளையைக் கோபப்படுத்தி அனுப்பிட்டீங்க!...அவங்க ரெண்டு பேரோட சிநேகிதம் எங்களுக்கே உறுத்தலாய் இருக்கற சமாச்சாரம்தான்!...ஆனாலும் எங்க மகனுக்காக நாங்க பொறுத்திட்டிருக்கோம்!...அது மாதிரி நீங்களும் உங்க மாப்பிள்ளைக்காக பொறுத்துக்க வேண்டியதுதானே?...அதை விட்டுட்டு... “அந்த சிநேகிதகாரன் மண்டபத்திலேயே இருக்கக் கூடாது...அவன் இருந்தா நாங்க கல்யாணத்தையே நிறுத்தினாலும் நிறுத்திடுவோம்”னு எங்களை மிரட்டி...எங்க மூலமா அவனையும் மிரட்டி...இப்ப எல்லாத்தையும் பெரிய பிரச்சினையாக்கி வெச்சது நீங்கதான்!...” திருப்பியடித்தாள்.

  

அவள் பேச்சு ராமலிங்க பூபதியின் கோபத்தை அதிகமாக்கி விட, அவர் ஆவேசமாய்க் கூவ, அவரைக் கையமர்த்தினார் பொன்னுரங்கம்.

  

“சம்மந்தி...ஏழு மாசம் பொறுத்துக்கிட்டீங்க!...இன்னும் ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்கங்க!...நாங்க எங்க மகனைத் தேடிக் கண்டுபிடிச்சிடறோம்!...மீதியை அவன் வந்ததும் பேசிக்குவோம்”

  

சென்ற நிமிடம் வரை கோபமாய்க் கொந்தளித்த ராமலிங்க பூபதி கொஞ்சம் இறங்கி வந்தார். “சம்மந்தி...பெண்ணைப் பெத்தவங்க இடத்திலிருந்து கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க சம்மந்தி!...எங்க குடும்பமே இப்ப இழவு வீடு மாதிரி ஆயிடுச்சு!...நாங்க எல்லோருமே நல்லா சாப்பிட்டு ஆறு மாசமாச்சு!...எந்த தப்புமே செய்யாத என் மகள் ஏன் தண்டனை அனுபவிக்கணும்?...லட்சக்கணக்குல செலவு பணி ஒரு கல்யாணத்தை நடத்தியது...துயரத்தை அனுபவிக்கவா?”

  

அவர் இறங்கி வந்ததைப் பார்த்த அவரது மனைவி சொர்ணமும் தன் குரலின் தொணியைக் குறைத்துக் கொண்டு, “சரிங்க சம்மந்தி...நீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துல மாப்பிள்ளையைக் கண்டுபிடிங்க!...அப்புறம் நடக்க வேண்டியதைப் பேசுவோம்” என்றாள்.

  

அவர்கள் அங்கிருந்து கிளம்பி வீடு வந்த சேர்ந்த போது, அவர்கள் வீட்டின் நடு ஹாலில், கால்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.