கூப்பிட்டேன். முத்து என்னை மோட்டிவேட் செய்து வர வச்சான். பாவம்!"
"எத்தனை மணிக்கு நீங்க முத்துக்குமாரை பார்த்தீங்கன்னு ஞாபகம் இருக்கா?"
"கரக்ட்டா தெரியலை. ஷூட் பி அரவுண்ட் சிக்ஸ் பிஃப்டீன்!"
"ஓ, ஓகே! எந்த பக்கம் இரண்டுப் பேரும் ஜாகிங் போனீங்க?"
"பக்கத்தில ஒரு ஸ்கூல் க்ரவுண்ட் இருக்கு, சார். நாங்க வழக்கமா அங்கே தான் போவோம்!"
"ஓகே... உங்க ஃபிரெண்ட் மேரேஜ் லைஃப் எப்படி இருந்ததுன்னு உங்களுக்கு தெரியுமா?"
"இன்ஸ்பெக்டர் சார், முத்து ரொம்ப நல்ல டைப்! எல்லோருடனும் ரொம்ப நட்போட பழகுவான். ஆனால் இந்திரா அப்படியே ஆப்போசிட். ரொம்ப ரிசர்வ்ட் டைப். அதனால அவங்களுக்குள் சண்டைன்னு சொல்ல மாட்டேன். பட் இட் வாஸ் நாட் அ பர்பெக்ட் மேரேஜ் லைஃப்!"
"ம்ம்ம் ஓகே! உங்க மொபைலை ஹான்ட் ஓவர் செய்துட்டு நீங்க போறதா இருந்தா போகலாம். உங்க டீடெயில்ஸை கான்ஸ்டபிள் கிட்ட கொடுத்திருங்க. தேவைப்பட்டா திரும்ப கூப்பிடுவோம்."
"ஓகே சார். இது ஐபோன், ரொம்ப காஸ்ட்லி போன். ப்ளீஸ், சீக்கிரமா திருப்பி தந்திடுங்க!" என்ற கோரிக்கையுடன் போனை கொடுத்தான் ஜமால்.
********
"சார், லேப் மக்கள் வந்தாச்சு. ஆம்புலன்ஸும் வந்திருச்சு. பாடியை ரிமுவ் செய்தாச்சு." என்று தென்றல்வானனுக்கு அப்டேட் கொடுத்தான் அபினவ்.
"குட் அபினவ்!"