(Reading time: 5 - 9 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

  

“எனக்கு வேற எதுவும் வேண்டாம்... நீ தான் வேணும்...”

  

மனோஜ் அவளின் கையை விலக்கி, அவளின் உதடுகளில் முத்தமிட்டான்... மீண்டும் அவளை தன்னுடன் சேர்த்து இன்னமும் இறுக இறுக அணைத்துக் கொண்டான்...

  

“மனோஜ்!!” என சிணுங்கினாலும் மஞ்சுவும் கணவனுடன் இழைய தான் செய்தாள்...

  

“ஐ மிஸ்ட் யூ pbs!” என்று மனோஜ் சொல்லவும், மஞ்சு செல்லமாக முறைத்தாள்...!

  

“பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கு மனோஜ்... உங்களுக்கு வேலைக்கு அப்புறம் தான் நான்??? வேலையில ஒரு பிரச்சனைன்னு வந்த உடனே முகத்தை அப்படி உர்ர்ர்ர்ன்னு தூக்கி வச்சிருந்தீங்க??? முதல் நாள் உங்களை பார்த்து கோபக் காரர்ன்னு நான் நினைச்சதுக்கு ஏற்ப இப்போ தான் ரியல் டெமோ கிடைச்சது...”

  

“உன்னை விட எனக்கு வேற எதுவும் முக்கியம் கிடையாது pbs... நான் அப்செட்டா இருந்ததுக்கு காரணம் அவங்க என்னை நடத்தின விதம்... செல்ப் எஸ்டீம் விட்டுக் கொடுக்க முடியுமா??”

  

“புரியுது புரியுது... திரும்ப அதே ஓல்ட் ரெகார்ட் பாடாதீங்க... ஆனால் தயவு செய்து அப்படி எரிஞ்சு விழாதீங்க... ரொம்ப கஷ்டமா இருந்தது... என் மனோஜா இப்படின்னு நம்பவே முடியலை...”

  

“சாரி மஞ்சு... நீ என்னை புரிஞ்சுக்கிட்டு உன் கோபத்தை விட்டுக் கொடுத்தது என்னை என்னமோ செய்யுது... நானும் கொஞ்சமாவது யோசிச்சு நடந்திருக்கனும்... சாரி டா...”

  

மனோஜ் அவளின் நெற்றியில் முத்தமிடவும், அவனுக்காக வாகாக நெற்றியை உயர்த்தினாள் மஞ்சு...

  

அவளின் நெற்றியில் வந்து விழுந்திருந்த முடிக்கற்றைகளை மெல்ல விலக்கியவன்,

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.