“அமுதா கிட்ட என்ன சொன்ன pbs?” என மென்மையாகக் கேட்டான்...
மஞ்சு பதில் சொல்லாமல் மனோஜின் தலையை கோதினாள்...
“pbs???”
“அமுதா பத்தி பேசுற நேரமா இது???”
அவளின் கேள்வி அவனின் உணர்வுகளை கிளர்ந்தெழ செய்தது... மஞ்சுவின் விழிகளில் இருந்த அழைப்பு வேறு அவனை அவள் பக்கம் காந்தமாக இழுக்க... மஞ்சுவை தவிர மற்ற அனைத்துமே அவனுக்கு மறந்துப் போனது...!!!
“டைம் ஆயிடுச்சு pbs...” என்று மனோஜ் சத்தமாக சொன்ன நேரம் கையில் டிபன் பாக்ஸுடன் கிச்சனில் இருந்து வந்தாள் மஞ்சு.
“சாரி மனோஜ்... இன்னைக்கு எக்ஸ்பெரிமென்ட் செய்ய டைம் கிடைக்கலை... தயிர் சாதம் தான் வச்சிருக்கேன்.. அட்ஜஸ்ட் செய்துக்கோங்க...”
“இதுவே எனக்கு போதும்... நீ ஏதாவது நல்லதா செஞ்சு சாப்பிடு... செய்ய பிடிக்கலைனா ஆர்டர் செய்திரு... எனக்கு லேட் ஆயிடுச்சு... நான் கிளம்புறேன்...”
“நான் எனக்கு பிடிச்சதா வாங்கி சாப்பிடலாமா??!!! அட டா... என்ன ஒரு அன்பு!!!!”
அவளின் கிண்டலில் கவரப்பட்டு,
“pbs...” என்று மனோஜ் அவள் பக்கமாக ஒரு அடி எடுத்து வைக்கவும்,
“மனோஜ் டைம் ஆச்சுன்னு சொன்னீங்க... கிளம்புங்க...” என்றாள் மஞ்சு...