“இன்னைக்கு நான் வர லேட் ஆகும் pbs! நீ பத்திரமா இரு...”
மனோஜை சுற்றியே யோசித்துக் கொண்டிருந்த மஞ்சுவிற்கு மனோஜ் அவனின் வெள்ளிக்கிழமைக்கான ப்ளான் பற்றி சொல்லி இருந்தது மறந்துப் போயிருந்தது...
அதனால் அவனை கேள்வியுடன் பார்த்தாள்...
“சொன்னேனே pbs... அமுதா சரவணன் கூட டின்னர் போறேன்... வர லேட் ஆகும்...”
“சொன்னீங்க... நான் மறந்துட்டேன்...” என்றதற்கு மேல் மஞ்சு எதுவும் சொல்லவில்லை...
கிளம்பும் நேரம் ஆகி இருந்தாலும், அவளையே பார்த்துக் கொண்டு நின்றான் மனோஜ்...
“இப்போ எதுக்கு இப்படி பார்க்குறீங்க??”
“நீ அன்னைக்கு சொன்னதை சொல்றீயான்னு பார்க்கிறேன்...”
“என்னைக்கு என்ன சொன்னேன்???”
“அமுதா பத்தி பேசுற நேரமா இது... மனோஜ்.... ன்னு....”
மனோஜ் வேண்டுமென்றே இழுத்து இழுத்து சொல்ல, மஞ்சு வெட்கம் மின்ன சிரித்தாள்... அவள் எப்போது அதை சொன்னாள் என்பது அவளுக்கும் நினைவில் இருந்தது...
முகம் சிவக்க அவள் சிரிப்பதை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மனோஜ்...
அதைக் கவனித்து,
“ஹை... ஆசை தான்... கிளம்புங்க முதல்ல...” என்றாள் மஞ்சு...