“ஒரு நாள் லேட்டா போகலாம்... தப்பு கிடையாது pbs...”
“புது வேலைல சேர்ந்து ஒரு வாரம் இன்னும் முடியலை???”
மனோஜ் அவளருகே நெருங்கி நின்று அவளின் கன்னத்தை மென்மையாக வருடினான்.
“ஐ லவ் யூ pbs...”
“ஒரு விதத்துல சண்டைப் போடுறதுல கூட எக்ஸ்ட்ரா பெனிபிட்ஸ் இருக்குன்னு தோணுது...” என்றாள் மஞ்சு மயக்கும் புன்னகையுடன்...
“வேண்டாம் pbs... அதுக்காக விளையாட்டுக்கு கூட என்னோட சண்டை எல்லாம் போட்டுறாதே... என்னால உன் சப்போர்ட் இல்லாம எதையும் செய்ய முடியாது...”
“இதே டையலாக்கை போன மாசம் சொல்லி இருப்பீங்களான்னு தெரியலையே???”
“எப்போவுமே சொல்வேன்... போன மாசம் எல்லாம் வேற மென்டல் ஸ்ட்ரெஸ்ல இருந்தேன் அவ்வளவு தான்...”
“நல்லா பேசக் கத்துக்கிட்டீங்க மனோஜ்!”
“மஞ்சு, இன்னைக்கு அமுதாவை திரும்ப பார்க்க போறேன்... நீ அவக் கிட்ட என்ன சொல்லி இருக்கேன்னு சொல்லக் கூடாதா??”
“ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ இது தானா இன்னைக்கு இந்த எக்ஸ்ட்ரா டைம் கொஞ்சலுக்கான காரணம்...”
“இல்லைன்னு உனக்கே தெரியும்... எப்போவும் போல பேச்சை மாத்தாம பதில் சொல்லு...”
“பேச்சை மாத்தக் கூடாதா?? அமுதா பத்தி பேசுற டைமா இதுன்னு கூட கேட்க கூடாதா???”