(Reading time: 11 - 21 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"உன்னை வச்சுட்டு ரொம்பவே கஷ்டம்டீ... முதல்ல ஒரு ஏமாளியை கண்டுப்பிடிச்சு உன்னை மாட்டி விடனும்.... அப்புறம் உன்னைக் கவனிச்சுக்கிறேன்....."

  

"ஹே எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டோம்... ஃபர்ஸ்ட் இயர் சி செக்ஷன்ல மதுமதின்னு ஒரு பொண்ணு இருக்கா தெரியுமா?"

  

வழக்கம் போல் திருமண பேச்சு எடுத்தவுடன் பேச்சை மாற்றும் பாரதியை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள் பவித்ரா. ஆனால் பாரதி கண்டுக் கொள்ளாதிருக்கவும், ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு, தோழியின் கேள்விக்கு பதில் சொன்னாள்.

  

"தெரியாமல் என்ன... அவள் தான் அந்த ஊரு இளவரசியாமே... ஸ்டாப் ரூம்ல எல்லோரும் ஓவர் பில்ட்-அப் கொடுத்திருக்காங்க...!"

  

"அது இல்லை பவி, அவளை உன் கிளாஸ் அப்போ கவனிச்சியா? அவ முகத்தில வித்தியாசமா ஏதாவது தெரிஞ்சுச்சா?

  

"அவள் எப்போதுமே கொஞ்சம் ரிசெர்வ்ட் டைப் தான், பாரு... இன்னைக்கு கொஞ்சம் ரொம்ப டல்லா.... ஒரு மாதிரி இருந்தாள்... கண்ணெல்லாம் கூட சிவந்து இருந்த மாதிரி இருந்தது... அடடா ஏன் பாரு ஏதாவது ராகிங் விஷயமா என்ன? எனக்கு இது தோணவே இல்லையே.... அவள் கிட்டேயே நேரா கேட்டிருந்திருக்கலாம்..."

  

"அச்சோ... மேடம் உங்க கற்பனை குதிரையை அதுக்குள்ள தட்டி விடாதீங்க... இன்னைக்கு என்னோட கிளாஸ்ல அவள் கிட்ட Kirchoff's லா சொல்ல சொன்னேன்... எழுந்து பே பே ன்னு முழிக்கிறா.... அடுத்து அவள் பக்கத்தில் இருந்த வினிதாவை கேட்டால் டான்னு பதில் சொன்னாள்... அந்த மதுமதி கிட்ட இனிமேல் என்னோட கிளாஸ்க்கு வரும் போது கொஞ்சம் ப்ரிபேர் பண்ணிட்டு வரனும்னு சொன்னேன்... அவ்வளவு தான் பவி டன் டன்னா கண்ணீர் வடிக்க ஆரம்பிச்சுட்டா...."

  

"ஒ! அது தானா அவள் அப்படி டல்லா இருந்ததுக்கு காரணம்..."

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.