(Reading time: 11 - 21 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

சற்றுக் குரலை உயர்த்தி.

  

"எஸ் சார்.... கிளாஸ்ல கேள்வி கேட்பதும், ப்ரிபேர் பண்ணிட்டு வர சொல்றதும், தப்பா எனக்கு தோணலை.... உங்க தங்கச்சியை கேள்வியே கேட்க கூடாதுனா பேசாமல், காலேஜில இருந்து நிறுத்திட்டு, ஹோம் ட்யுட்டர் வச்சு படிப்பை கண்டின்யு பண்ண சொல்லுங்க..." என்றாள் பாரதி சற்றும் தளராமல்.

  

அண்ணனின் கோபத்திற்கும், குரலுக்கும், சற்றும் தயங்காமல் பேசும் பாரதியை ஆச்சர்யமாக பார்த்தாள் மதுமதி.

  

"என் தங்கச்சி இந்த காலேஜை விட்டு போக வேண்டியது அவசியமா இருக்காது... தேவைப் பட்டால் எனக்கு பிடிக்காதவங்க தான் போக வேண்டி இருக்கும்..."

  

"என்ன சார்... சின்னக் குழந்தை மாதிரி பேசுறீங்க? கிளாஸ்ல கேள்வி கேட்டேன்... உங்க தங்கச்சிக்கு பதில் தெரியலை.. நாளைக்கு ப்ரிப்பேர் பண்ணிட்டு வான்னு சொன்னேன்.. இதிலே நான் ஏதாவது கடுமையா பேசினேனா? இல்லை தப்பு செஞ்சேனா? இந்த மாதிரி தொட்டா சிணுங்கியா இருக்க கூடாதுன்னு உங்க தங்கச்சி கிட்ட சொல்வீங்களா அதை விட்டுட்டு இப்படி வந்து ரவுடி மாதிரி என்னை மிரட்டுவீங்களா? போய் வேலை வெட்டியை பாருங்க சார்...." என்றாள் பாரதி சற்றும் அசையாது.

  

பவித்ராவும், மதுமதியும், வாயடைத்துப் போய் நின்றிருந்தனர்.

  

"ஏய், நீ ரொம்ப பேசுற.... இப்போவே போய் பிரின்சிபால் கிட்ட பேசி உன் சீட்டை கிழிக்க சொல்றேன்...."

  

"என்ன வேணா சொல்லுங்க... முதல்ல எனக்கு மரியாதை கொடுத்துப் பேசுங்க.... ஆனாலும் பாவம் சார் உங்க அப்பா... அப்படி ஒரு நல்லவருக்கு இப்படி ஒரு மகன்..." என்றாள் பாரதி சற்று ஏளனமாக.

  

விவேக் கோபத்தின் உச்சிக்கே சென்றான். அவனின் பேச்சை யாரும் இதுவரை இப்படி உதாசீன படுத்தியது இல்லை. அதுவும் தங்கை முன் இப்படி மானத்தை வாங்கி விட்டாளே, இவளை

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.