(Reading time: 11 - 21 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"இவள் என் தங்கை... உங்களுக்கு அது இதுவரை தெரியாதுப் போல... பரவாயில்லை...." என்றான்.

  

"இல்லை சார்... எனக்கு மதுமதி உங்கள் தங்கச்சின்னு தெரியும்..." என்றாள் பாரதி மதுமதியை பார்த்து. மதுமதிக்கு நடந்துக் கொண்டிருக்கும் பேச்சில் அவ்வளவு விருப்பம் இல்லை என்பதை அவள் முகம் காட்டியது.

  

"ஓ!" என்றான் விவேக் மீண்டும் ஆச்சர்யத்தோடு!

  

"இவள் எங்க வீட்டில் செல்ல பெண்... அவள் மனசு வேதனைப் படுவதை எங்களால் தாங்க முடியாது..."

  

விவேக் சொல்ல வரும் செய்தி புரிந்தப் போதும், அவனே சொல்லட்டும் என முடிவு செய்தவளாக,

  

"நல்ல விஷயம் தானே சார்... இது போல் குடும்பம் கிடைக்க, மதுமதி ரொம்ப லக்கி தான்...." என்றாள்.

  

"உண்மை தான்... அதனால், நீங்க இனிமேல் உங்கள் கிளாஸிலும் மதுமதியின் மனசு வருத்தப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..." என்றான் தங்கையை அன்புடன் பார்த்தபடி.

  

"சார்... இன்னைக்கு செகண்ட் ஹவர் நான் அவங்க கிளாசுக்கு போகனும்... வேணும்னா ஒன்னு செய்ங்க... எனக்கு பதில் நீங்க அவங்க கிளாசுக்கு மட்டும் பாடம் நடத்துங்க..."

  

அவளின் பதிலில் விவேக் மட்டும் அல்லாது, பவித்ராவும் சற்று அதிர்ந்துப் போனாள். நல்ல வேளையாக, கோபால் வேறு வேலையாக சென்று விட்டதால் அருகில் வேறு யாரும் இல்லை.

  

"அதாவது... உங்க விஷயத்தில நான் தலையிட கூடாதுன்னு சொல்றீங்க?" என்றான் விவேக்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.