(Reading time: 6 - 11 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

இருக்கும்...”

  

“அப்போ உங்களுக்கு ப்ரோமோஷன் வரப் போகுதா??”

  

“அதுக்குள்ளே ப்ரோமொஷனா? எனக்கு தெரிஞ்சு இன்னும் ஒரு மூணு வருஷத்துக்கு அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது...”

  

மஞ்சு அவனின் அருகே... வெகு அருகே நெருங்கி வந்தாள்...

  

“வேலைல ப்ரோமோஷன் கிடைக்கலைனா என்ன??? நான் உங்களுக்கு ப்ரோமோஷன் தரேன்...”

  

அதை சொன்னப் போது மஞ்சுவின் முகம் தனி அழகுடன் பிரகாசித்தது...

  

மனோஜ் அதில் கவரப் பட்டவனாக அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்...

  

அவன் சட்டைக் காலரை செல்லமாக பற்றி,

  

“மனோஜ், என்னன்னு கேட்க மாட்டீங்களா???” என்றாள் மஞ்சு...

  

“என்ன?? இன்னைக்கு உன் கிட்ட என்னமோ பெரிய சேன்ஜ் தெரியுது... என்ன விஷயம் pbs???”

  

“இனிமேல் எல்லாமே மாறப் போகுது மனோஜ்...”

  

மனோஜ் என்ன என்று கேள்வி கேட்கும் முன்பே அவனின் கையைப் பற்றி அணிந்திருந்த கேஷுவல் சட்டையால் மூடப் பட்டிருந்த தன் வயிற்றுப் பகுதியின் மீது அவன் கையை வைத்தாள் மஞ்சு...

  

ஒரு வினாடி புரியாது விழித்த மனோஜ்... மறு கணம் புரிந்துக் கொண்டதன் அறிகுறியாக விழிகளை விரித்தான்...

  

“ம...ஞ்...சு...??” என அவன் கேள்வி கேட்கவும்,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.