(Reading time: 16 - 31 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"அன்னைக்கு அப்பா உன்கிட்டயும் பேசினார்ல...! என்ன உனக்கும் டோஸ் விட்டாரா?"

  

"ப்ச் இல்லை... நீ எப்போ இப்படி மாறினேன்னு கேட்டார்... உன் கூட சேர்ந்து என் மகன் உருப்படுவான்னு பார்த்தால், நல்லா இருக்க பையனை நீயே கெடுத்துடுவ போல இருக்குன்னு சொன்னார்..."

  

"அடடா... சாரிடா... அப்பா எப்போதும் இப்படி தான்..."

  

"இல்லை பார்த்தி எனக்கு அவர் மேலே கோபம் எல்லாம் இல்லை... தப்பு நம்ம மேலே தான்... அந்த மாதிரி ஒரு பர்சனல் விஷயத்தை பத்தி அங்கே பேசி இருக்க கூடாது தான்..."

  

"ம்ம்ம்... அதில் உன் மேலே தப்பு இல்லையே... உனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாதே..."

  

"ஆமாம் பார்த்தி... உனக்கு எப்படி அந்த பாரதி லவ் மேட்டர் எல்லாம் தெரிய வந்தது? உனக்கு அவளை முன்னாடியே தெரியுமா என்ன?"

  

"தெரியும்னு இல்லைடா... அது ஒரு பெரிய கதை...."

  

"சொல்லேன்டா..."

  

ஆர்வத்துடன் ஒலித்த நண்பனின் குரலில் ஆச்சர்யப் பட்ட பார்த்திபன்,

  

"ஓஹோ சார் கதை அப்படி போகுதா??? என்ன சார் இவ்வளவு ஆர்வம்??? என்ன லவ்வா?" என்றான் கேலியாக!

  

நண்பனின் கேள்வியில் சற்றே திகைத்த விவேக்,

  

"ப்ச்... என்னடா நீ... லவ் எலாம் இல்லை... சும்மா தெரிஞ்சுக்கலாமேன்னு தான் கேட்டேன்..."

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.