(Reading time: 16 - 31 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"நீ என்னைக்காவது அடுத்தவங்க விஷயத்தை அவங்களே சொல்லாமல் கேட்டு தெரிஞ்சுருக்கியா? என்கிட்டேயே கதை விடாத..."

  

"என்னடா பார்த்தி இப்படி சொல்ற.... சும்மா தான்டா கேட்டேன்..."

  

"சரி... சும்மா தானே கேட்ட, அப்போ அடுத்த வாரம் சொல்றேன்... இன்னைக்கு ரொம்ப முக்கியமான வேலை ஒன்னு இருக்கு..."

  

"டேய்... ரொம்ப ஃபிலிம் காட்டாதே..."

  

"என்னடா நீ... நிஜமாவே வேலை இருக்கு...!"

  

விவேக் பதில் சொல்லாது முறைக்கவும், பார்த்திபன் இறங்கி வந்தான்.

  

"சரிடா முழுக் கதையை அப்புறம் சொல்றேன்... இப்போதைக்கு ஷார்ட்டா சொல்றேன்.... பாரதியும் அவளோட காலேஜில கூட படிச்ச பாலாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனாங்க... பாலா அவங்க வீட்டில ஒரே பையன்... கொஞ்சம் பணமுள்ள குடும்பம்... பாரதியும் அவங்க வீட்டில ஒரே பொண்ணு தான்... ஆனால் பணக்காரங்கன்னு சொல்ல முடியாது கொஞ்சம் அப்பர் மிடில் கிளாசுன்னு வச்சுக்கோ... வீட்டுக்கு விஷயம் தெரிஞ்ச போது முதல்ல பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை... கொஞ்சம் லைஃப்ல செட்டில் ஆனப் பிறகு கல்யாணம்னு முடிவு செஞ்சாங்க... இப்படி இருக்கும் போது தான் பாலா சவுந்தர்யாவை மீட் செய்தான்... சவுந்தர்யா நம்ம முருகா அண்ட் கோ சொந்தக்காரர் பழனியப்பாவோட ஒரே மகள். சவுந்தர்யாவிற்கு பாலாவை ரொம்ப பிடிச்சுது. அப்புறம் என்ன அவங்க அப்பா, அம்மா கிட்ட சொன்னாள். ஒரே பொண்ணு விருப்பத்தை ஏத்துக்காம விட முடியுமா, அவங்க ரெண்டு பேரும் எதிர்க்கலை. பழனி சாருக்கு பாலாவை ஓரளவிற்கு தெரியும் அவருக்கும் அவனை பிடிச்சு தான் இருந்தது... அப்புறம் என்ன நம்ம தமிழ் சினிமால வர மாதிரி காதலை பணம் வென்றது... பணத்தை பார்த்தவுடன், பாலாவுக்கு சவுந்தர்யா உசத்தியா தெரிஞ்சா..."

  

பார்த்திபன் சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த விவேக், இப்போது குறுக்கிட்டு,

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.