(Reading time: 17 - 34 minutes)
Manasa Theevu
Manasa Theevu

நல்லா சம்பாதிக்கிறார், ஒரு கஷ்டமும் இல்லை."

  

"அப்போ உன் ஆத்துக்காரர் என்ன செய்கிறார்? வேலைக்கு போகிறாரா? எங்க வேலை செய்கிறார்?"

  

"அம்மே அவர் பிசினஸ் செய்யறார். அவருக்கு ஒரு தனி தீவே இருக்கு. மானசா

  

தீவு கேள்விப்பட்டிருக்கியா ?அது எங்களுடையதுதான்."

  

"ஐயோ அத்தனை பெரிய ஆளா?"

  

"ஆமாம் அம்மே பணத்துக்கு ஒரு குறையுமில்லை, குட்டிகள் எல்லாமும் நல்லா பாத்துக்கிறோம். ஆளும் உண்டு, கவலையே படாதே. நீயும், அச்சனும், அச்சன் சரி ஆன உடனே, அங்கு வந்து இருந்து உடம்பு தேறிய உடன் போகலாம்."

  

" அந்த பிராமணன் என்ன சொல்வார் தெரியலையே?"

  

அப்போது மாதவன் உள்ளே நுழைந்தான்.

  

“வணக்கம் அம்மே.” என்று மாதவன் கூறவும்,

  

வெட்கத்துடன் வணக்கம் கூறினார் மானசாவின் அம்மா. "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ?"என்று மாதவனைப் பார்த்து  கேட்டாள்.

  

"எல்லா ஏற்பாடும், அச்சனுக்கு செய்தாச்சு. ஒன்னும் குறைவே இருக்காது. நாளைக்கு நல்ல ஆயிடுவார், நீங்க கவலையே பட கூடாது அம்மே!" என்று கூறிக்கொண்டே மாதவன் தன் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டு "எப்படி இருக்கிறாய் மானசி உங்க அப்பாக்கு ஒன்னும் ஆகாது எல்லாம் சரியாயிடும். "என்று தைரியம் கொடுத்தான் மாதவன்

  

மானசாவிற்கு,  தன் அம்மா எதிரில் தன் கணவன் தன்னை அணைப்பதை நினைத்து வெட்கம், முகம் சிவந்தாள் . அவள் கையை எடுக்க முயற்சித்தும் , அவன் விடுவதாக இல்லை.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.