(Reading time: 17 - 34 minutes)
Manasa Theevu
Manasa Theevu

காத்துக் கொண்டிருந்தான்.  "எங்க போனீங்க? நீங்க யாருமே இங்கே இல்லையே?"

  

"அட கார்த்திக்! எப்படா வந்த நீ?"

  

“நான், மூணு மணிக்கு வந்துட்டேன் உங்க யாரையும் காணோம்? எங்க போனீங்க? அப்பாவை தனியா விட்டுட்டு வேற போயிட்டீங்க?"

  

"நான்தான் கார்த்திக் , அம்மையை என்னோட கூட்டிட்டு போனேன் ராத்திரி தனியா அம்மா இங்க இருக்கனுமே, அதுவும் நர்ஸ் இருக்காங்க அப்பாவை கவனிச்சுக்க"

  

"அம்மா அச்சனுக்கு என்ன ஆச்சு? எப்படி ஆச்சு இதெல்லாம்?"

  

கொஞ்ச நாளாவே அப்பாக்கு உடம்பு சரி இல்லைடா கண்ணா, திடீர் மார்வலி என்று சொல்லிட்டார். எனக்கு  கையும் ஓடலை காலும் ஓடலை, யாருமில்லை ,உடனே பக்கத்தாத்து  மாமா உதவியோடு ஆஸ்பிடல்ல கொண்டு சேர்த்தேன். பிறகுதான் மானசா சாரதா மாமி சொன்னாள்ன்னு வந்தாள்."

  

"இப்ப டாக்டர் என்ன சொன்னார்?"

  

ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது மாதவன் அங்கு வந்தான் " அச்சனை இப்போது ஓபரேஷனுக்கு கூட்டிட்டு போவாங்க எல்லாரும் வெளியில் வந்து பேசிட்டு இருங்க.."

  

"நாயரே,  இதுதான் தம்பி கார்த்திக்."

  

"கார்த்திக், இது உன் அத்திம்பேர் மாதவன் நாயர்!"

  

மாதவன், கார்த்திகை தன்னோடு அணைத்துக் கொண்டான்." எப்ப வந்த கார்த்திக்?"

  

“மூணு மணிக்கு வந்துட்டேன், அத்திம்பேர்!”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.