(Reading time: 17 - 34 minutes)
Manasa Theevu
Manasa Theevu

  

சிறிது நேரத்தில் டாக்டர் ஆபரேஷன் முடிந்து வெளியே வந்து மாதவனிடம் பேசினார்.

  

"உங்க அச்சனுக்கு ஆபரேஷன் முடிஞ்சு போச்சு இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் அவருக்கு நினைவு வர. "

  

" ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்!" என்று மாதவன் கூறினான்.

  

"ஏய்… தாங்க்ஸ் எல்லாம் எதுக்கு, இது எண்ட டியூட்டி அல்லோ?" என்று மாதவனின் தோளை அழுத்தி விட்டு, அங்கிருந்து அகன்றார் டாக்டர்.

  

"இன்னும் இரண்டு நாட்கள் ஆப்சர்வேஷனில் இருக்கனும், அதற்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்ஞ்சுடலாம், ஒன்னும் கவலைப்பட வேண்டாம் கேட்டோ ?" என்று டாக்டர் கூறினார்.

  

" அம்மே, நீங்க போய் அச்சனைப் பாருங்கோ, நாங்க பின்னே போறோம்.”

  

" சரி!" என்று தலையை ஆட்டிவிட்டு, உள்ளே சென்றார், மானசாவின் அம்மா.

  

மாதவன், கார்த்திக்கிடம், "நீ என்ன படிக்கிற?" என்று கேட்டான்.

  

" நான்  கம்ப்யூட்டர் இஞசினியரிங் ஃபைன்ல் இயர்."

  

" எப்படி படிக்கற?"

  

" நல்லா படிக்கறேன். "

  

" குட், மேல படிக்க இஷ்டமா சொல்லு, நான் ஏற்பாடு செய்ஞ்சு தறேன்."

  

" அது...அது வந்து, ஒரு வேலை கிடைச்சா போயிடலாம்னு  இருக்கேன்."

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.