(Reading time: 17 - 34 minutes)
Manasa Theevu
Manasa Theevu

"அத்திம்பேர் என்றால், என்ன அர்த்தம்?"

  

"அக்காவோட பர்த்தாவை அப்படித்தான் கூப்பிடுவாங்க."

  

"ஓ!" என்ற மாதவன்.

  

"எனக்கு நீ இது பத்தி சொல்லவே இல்லையே மானசி"

  

“சொல்ல அவசியம் ஏற்படவில்லை நாயரே, இப்பதான் கார்த்திக்கை பார்த்தீர்களா, அதான் சொன்னேன்"

  

"அது ஏனோ புது வார்த்தையா இருக்கிறது.”

  

"எல்லாம் பழகிடும் நாயரே!"

  

அவனும் நகைத்துக் கொண்டே அவளை அணைத்துக் கொண்டான். அப்போது டாக்டர் நர்ஸ் எல்லோரும் வந்து கொண்டிருந்தார்கள்.

  

"மிஸ்டர் மாதவன் எல்லாம் ரெடியாயிடுத்து உங்க அச்சனை இப்ப நான் கூட்டிட்டு போறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆப்பரேஷன் ஆரம்பிச்சுடுவோம்."

  

கார்த்திக் தன் அக்கா மானசாவையும், அத்திம்பேர் மாதவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். அத்திம்பேருடைய ஒவ்வொரு அசைவையும் பார்த்து ரசித்து கொண்டு இருந்தான். என்ன அழகு தன் அத்திம்பேர் தன்  அக்காவுக்கு ஏற்றவர்தான் இவர், என்று நினைத்துக் கொண்டான்.

  

அக்காவை சின்ன வயதில் பார்த்தது தான் அதற்கு பிறகு இப்போதுதான் பார்க்கிறான் இத்தனை வருடங்கள் கழித்து. அதனால் அவனுக்கு, அக்காவிடம் சிறிது வெட்கமாகவும் இருந்தது பேசுவதற்கு.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.