“நீங்க சொல்றது உண்மையா இருந்தா, உங்களைப் போல அவளும் கேள்வி கேட்கனும், திட்டனும், செய்யாதேன்னு சொல்லனும்!”
“உன் ஆசை நிறைவேறி, உங்களுக்கு கல்யாணம் நடந்தா, அவளுக்கு உட்கார்ந்து கிளாஸ் எடுத்து இதை எல்லாம் செய்யனும்னு சொல்லிக் கொடு!”
“கல்யாணம் பத்தி எனக்கு இப்போ செகன்ட் தாட்ஸ் வந்திருக்கு! இப்படி ஓவர் சென்ஸிடிவா இருக்க பொண்ணை கல்யாணம் செய்தா வாழ்க்கை முழுக்க கஷ்டம் தான்!”
“சரி, அவளை கல்யாணம் செய்துக்காதே! இப்போ எல்லாம் நீ உன் பிரென்ட்ஸ் கூட ஈவ்னிங் ஹாங் அவுட் செய்யப் போறதுக் கிடையாதா? எப்போ பாரு மொபைலை கொடுன்னு என்னை தொல்லை செய்துட்டு இருக்க?”
“இந்தாங்க உங்க போன். இனிமேல் கேட்கலை!”
விவேக் போனை ஹரிணியின் கையில் திணித்து விட்டு கோபமாக சென்றான்.
“ஆதி, என்ன யோசிச்சுட்டு இருக்க?” அக்ஷரா ஆழ்ந்த யோசனையில் இருந்த ஆதித்யாவின் பக்கத்தில் அமர்ந்தாள்.
“செகன்ட் ரவுன்ட்க்காக நான் இப்போ சம்பிட் செய்திருக்க ப்ரோபோசல் எனக்கு பிடிக்கலை அக்ஷரா.
“எதுக்கு அப்படி சொல்ற?”
“இந்த ரவுண்ட்ல நாம ஒரு பிஸ்னஸ் ஐடியா கொடுத்து அதை எப்படி செய்வோம், என்ன செலவாகும்ன்னு எல்லாம் சொல்லி, ஒரிஜினல் பிஸ்னஸ் ப்ரோபோசல் கொடுக்கனும்!”
“எனக்கு அது தெரியுமே ஆதி. உன்னுடைய காஸ்ட் எபெக்டிவ் பார்மிங் ப்ராஜக்ட் பத்தி நாம