(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க...”

  

விவேக் என்ன எதிர்பார்த்து சொன்னானோ... ஆனால், பாரதியின் முகம் அவன் சொன்னதைக் கேட்டு மாறியது. மனதில் தன்னை சமாதானப் படுத்த முயன்றுக் கொண்டிருந்தவளுக்கு அதன் வழியே ஒரு நல்ல வாய்ப்பும் கிடைத்தது.

  

அழகு...!!!!

  

இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி தான்...

  

மிஸ்டர் விவேக்... நீங்க எதைப் பேசினாலும் நான் உங்க தங்கையோட லெக்சரர் என்பதை மனதில் வைத்து பேசுங்க... இப்படி எல்லாம் என்கிட்டே பேசுவது சரி இல்லை...” என்றாள் பாரதி, அவளுடைய ட்ரேட்மார்க் கடினக் குரலில்!

  

அவளின் பதிலில் விவேக்கின் முகமும் மாறி தான் போனது. அவன் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை என்றுப் புரிந்தது. சில வினாடிகள் அங்கே சஞ்சலமான அமைதி நிலவியது. பின் விவேக்கே பேசினான்.

  

சாரிங்க பாரதி, நான் அப்படி சொன்னது தப்புன்னா மன்னிச்சுக்கோங்க... மதுவோட லெக்சரர் மட்டும் இல்லாமல் நீங்க எனக்கும் தெரிஞ்சவங்கன்னு நினைச்சுப் பேசிட்டேன்... சாரி...”

  

ஓ! உங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லோர் கிட்டேயும் இப்படி தான் பேசுவீங்களோ?”

  

ஆமாம்... என் மனசில் தோன்றுவதை உடனே சொல்லிடுவேன்... எல்லோருக்கும் அது தெரியும்... அது போகட்டும், நீங்க என்னை அவாயிட் பண்ணனும்னு நினைப்பதற்கு காரணம் நான் அன்று ஹாஸ்ட்டலில் கேட்ட கேள்வி தானே???”

  

அவனின் நேரடி கேள்வியில் மீண்டும் தடுமாறியப் போதும், சமாளித்துக் கொண்டு,

  

அவாயிட் பண்ணனும் என்றெல்லாம் நினைக்கலை... ஆனால், நீங்க அன்னைக்கு அப்படி ஒரு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.