(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

விஷயம் கேட்டு, நான் நெகட்டிவா பதில் சொன்ன பிறகு உங்களுடன் பேசுவது கொஞ்சம் வேற மாதிரி தான் இருக்கு...” என்றாள் பாரதி.

  

அவள் முகத்தை கூர்ந்து கவனித்தப் படி அவளின் பதிலை கேட்ட விவேக்,

  

இது தானா விஷயம்? நீங்க அதை எல்லாம் நினைச்சு இனி கவலையே பட வேண்டாம்... என்ன பார்க்குறீங்க? அங்கே அந்த பக்கம் ஒரு ரெட் கலர் சுரிதாரில் ஒரு பொண்ணு இருக்காளே... அவள் பெயர் ஸ்ருதி... அவளை தான் எனக்கு கல்யாணம் செய்து வைக்க எங்க அம்மா செலெக்ட் செய்து வச்சிருக்காங்க... ஸோ, அன்னைக்கு பேசினதை எல்லாம் மறந்துடுங்க...” என்றான்.

  

அவன் பேச்சைக் கேட்டப் படி திரும்பி அவன் காட்டிய பக்கம் பார்த்தாள் பாரதி. சில நாட்களுக்கு முன் கல்லூரியில் விவேக்கோடு பேசியபடி கார் அருகில் நின்றவள் தான் சுருதி என்பத்துப் புரிந்தது. ஆனாலும்... என்று எண்ணியப்படி மீண்டும் விவேக்கைப் பார்த்தாள்.

  

என்ன இப்படி ஒரு பார்வை...? நிஜம் பாரதி...! இப்படி பேர் சொல்லி கூப்பிடுறேன்னு கோபப் படாதீங்க... உங்களை என்னை ஒரு ஃபிரெண்டா எல்லாம் அக்ஸப்ட் பண்ணிக்க சொல்லலை... அட்லீஸ்ட் பரிச்சயமான ஒருவனா ட்ரீட் செய்தால் போதும்ன்னு தான் சொல்றேன்... நான் கொஞ்சம் முன்னாடி பேசின மாதிரி திரும்ப பேச மாட்டேன்... நாம நமக்குள்ள நடந்த பழைய பேச்சு வார்த்தை எல்லாத்தையும் மறந்திடுவோம்...” என்றான் விவேக்.

  

****************

  

மாவுடன் அந்த பெரிய பங்களாவினுள் சென்று புடவையின் கரையை கழுவி சரி செய்தாள் பவித்ரா. திரும்பி பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வர நடக்கும் போது தான் பவித்ராவிற்கு உள்ளே செல்லும் போது கண்ணில் படாத அந்த வீட்டின் கலை அலங்காரங்கள் பட்டது. மிகவும் ரசனையோடு தேர்ந்தெடுக்கப் பட்டு அலங்கரிக்க வைக்கப் பட்டிருந்தவற்றை இப்போது பார்த்து ரசித்தாள்.

  

பொதுவாகவே கலை ரசனை மற்றும் அழகுணர்ச்சியும் கொண்டவள் என்பதால், அங்கே அடுக்கி வைக்கப் பட்டிருந்த பூக்களில் தொடங்கி சுவரில் அங்கங்கே மாட்ட பட்டிருந்த

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.