(Reading time: 12 - 24 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

இல்லை உமா... ரெண்டு வருஷம் முன் நடந்த ஒரு விபத்தில அவங்க ரெண்டு பேருமே இறந்துட்டாங்க...”

  

ஓ! அப்படியா...”

  

ம்ம்... ஊரில இருக்கிற அவளோட நிலத்தை எல்லாம் அவளை சின்ன வயசில இருந்து வளர்த்த ஒரு கப்பில் பார்த்துக்குறாங்க... எப்போதாவது பாரதி அங்கே போவதுண்டு... ஆனால் ரொம்ப ரேர் தான்... ஆனால், இங்கே நாங்க ரெண்டு பேர் மட்டும் நல்ல ஃபிரண்ட்ஸ் இல்லை, என்னுடைய மாமியாரும், கணவரும் கூட பாரதிக்கு க்ளோஸ் தான்... என்னோட அத்தைக்கு அவள் ஒரு மகள் போல... அவங்க ரெண்டுப் பேரும் சேர்ந்தால் என் தலைத் தான் உருளும்...” என்றால் பவித்ரா புன்னைகையோடு.

  

உமா புரியாமல் பார்த்தாள்.

  

அத்தையும், பாரதியும் சேர்ந்து எப்போதும் எங்க ரெண்டுப் பேரையும் கிண்டல் செய்துட்டு இருப்பாங்க... பொதுவா சனிக்கிழமை மதியம் ஆர் ஈவ்னிங் போல வந்துட்டு, பாரதி திரும்ப சண்டே ஈவ்னிங் ஹாஸ்டல் போயிடுவா... எங்க கூடவே தங்க சொல்லி எவ்வளவோ சொல்லிட்டோம்... கேட்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறாள்... சரி, அதெல்லாம் இருக்கட்டும் அப்புறம் இன்னொரு நாள் சாவகாசமா பேசலாம். பாவம் பாரதி தனியா அங்கே இருப்பாள்... வாங்க நாம போகலாம்...” என்றாள் பவித்ரா.

  

****************

  

ம்மா அப்பாவோட பிசினஸ் எடுத்து நடத்துவது எல்லாம் சரி தான். ஆனால், நாம செஞ்சதாகவும் ஏதாவது இருக்கனும் தானே... அதுக்காக நிறைய திட்டம் எல்லாம் வச்சிருக்கிறேன்...” என்றான் விவேக்.

  

அவன் சொல்வதை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள் பாரதி.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.