(Reading time: 11 - 21 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

   

தொடர்ந்த வாரம் எந்த விதமான நிகழ்வுகளும் இல்லாது சாதாரணமாக சென்றது. பாடங்கள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், தேர்வுக்கு இன்னும் இரண்டே வாரங்கள் தான் இருந்தது. முதல் வருடத்தில் இருந்த மாணவர்களிடம் மற்ற வருடத்தினரை விட ஒரு வித பரபரப்பு இருந்தது. தேர்வுக்கு தயார் செய்யும் உத்திகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்... அவர்களை இயல்பாக, தைரியமாக தேர்வுக்கு செல்ல தயாராக்கினார்கள்...

   

இப்படி அந்த வாரம் பெரிய அளவில் பரபரப்பின்றி சென்றதால், சனிக் கிழமைக் காலையில் பாரதி எப்போதையும் விட சற்றுக் கூடுதலாகவே ரிலாக்ஸ்டாக இருந்தாள். வழக்கம் போல் தலைக்கு குளித்து விட்டு, தனக்கு பிடித்தக் கதையை அவள் படித்துக் கொண்டிருந்தப் போது, அவளின் அறைக் கதவு தட்டப் பட்டது.

  

"பாரதி அக்கா..." என அடுத்த அறை சித்ராவின் குரலும் கேட்டது.

  

"வா சித்ரா, கதவு திறந்து தான் இருக்கு..." என்றாள் பாரதி.

  

"அக்கா, உங்களை பார்க்க விசிட்டர் ஒருத்தர் வந்திருக்கார்..."

  

"என்னைப் பார்க்கவா???" என்ற பாரதியின் முகத்தில் சிந்தனைக் கோடுகள் தோன்றின.

  

"ஆமாம் அக்கா, நெடு நெடுன்னு பனை மரம் மாதிரி ஒருத்தர் வந்து இருக்கார்..."

  

பாரதிக்கு சட்டென்றுப் புரிந்தது... வந்திருப்பது விவேக்! அவன் தான் அப்படி மற்றவரை அண்ணாந்துப் பார்க்க வைப்பவன்.

  

"தேங்க்ஸ் சித்ரா..." என்று அடுத்த அறை தோழிக்கு நன்றி சொன்னாள்!

  

சித்ரா திரும்பி செல்லவும், கீழே செல்ல எழுந்தாள் பாரதி. ஒரு வினாடி தயங்கி விட்டு, அவசரமாக பாதி காய்ந்திருந்தக் கூந்தலை லூசாகப் பின்னினாள். பின், கண்ணாடியில் தன்னை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.