(Reading time: 11 - 21 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

ஒரு முறை பார்த்து விட்டு, வேகமாக கிளம்பி கிழேச் சென்றாள். எதிரில் தென்பட்ட பரிச்சயமான முகங்களைப் பார்த்துப் புன்னகைத்தப் படி வந்தவள், விசிட்டர்ஸ் அறையை அடைந்து விவேக்கை கண்களால் தேடினாள். அவனை அங்கே காணாது, வாசல் பக்கம் கண்களை ஓட்டினாள். அவள் எதிர்பார்த்தபடியே வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அவளுக்கு முதுகு காட்டியப்படி நின்றிருந்தான் விவேக்.

  

என்ன தான் பாரதி இல்லை என்று சொல்லிக் கொண்டாலும், விவேக் அவளை சந்திக்க வந்திருப்பதில் அவளுக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது... அவன் எந்த விஷயமாக வந்திருந்தாலும் சரி தான்... புன்னகையோடு அவனருகில் சென்று,

  

"ஹலோ விவேக் சார் ..." என்றாள் பாரதி.

  

அவள் குரல் கேட்டு அவசரமாக திரும்பிய விவேக்கின் கண்களில் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது. அவளைப் பார்த்த ஒரு சில வினாடிகள் அவன் கண்களில் ஏமாற்றத்தின் சாயல் தோன்றியது! 

  

ஏன்? எதற்கு? என்று பாரதி யோசிக்கும் போதே, விவேக் முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் காணமல் போனது!

  

"ஹலோ பாரதி மேடம்..." என்றான் அவன் புன்னகையோடு.

  

"லோ சார்!" என்றாள் பாரதி குழப்பத்துடனே.

  

"ஏன் பாரதி உங்களை டிஸ்டர்ப் செஞ்சுட்டேனோ?" என்றான் விவேக்!

  

இது என்ன கேள்வி, என்பது போல அவள் பார்க்கவும்,

  

"சாரி, சனிக்கிழமை வந்து இப்படி பேசுறது தொந்தரவு தான், எனக்கேப் புரியுது... ஆனால் என்னவோ உங்க கிட்டப் பேசணும்னு தோணிச்சு..." என்றான் விவேக்.

  

"பரவாயில்லைங்க, எனக்கு அப்படி ஒரு வேலையும் இல்லை. சும்மா கதை தான் படிச்சிட்டு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.