(Reading time: 11 - 21 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"என்ன?"

  

"ஆமாம் பாரதி, ஸ்ருதி பத்தி உங்க கிட்ட சொன்னேன் தானே, அவளுக்கு வேற இடத்தில கல்யாணம் நிச்சயமாயிடுச்சாம்..."

  

"ஓ!!!"

  

"ம்ம்ம்ம்... அது ஏன் யாருக்கும் என்னைப் பிடிக்க மாட்டேங்குது?"

  

"வேற யாருக்கு உங்களைப் பிடிக்கலை?"

  

பாரதி அதைக் கேட்ட விதத்தில், அவளை ஒருப் பார்வை பார்த்து விட்டு,

   

"இது கொஞ்சம் பழையக் கதை, பாரதி... என் வாழ்க்கையில என்னை முதல் முதல் இம்பாக்ட் செய்த பெண், என்னோட காலேஜ் மேட் லாவண்யா... அவள் கிட்ட எனக்கு எல்லாமே பிடிக்கும்... ஆனால் அது என்னவோ அவளுக்கு எங்க செட்லயே இருந்த விக்னேஷை தான் பிடிச்சது...! அப்புறம், இப்போ ஸ்ருதி... இதுக்கு நடுவில் உங்க கிட்டேயும் கல்யாணம் பத்தி பேசினேன் தானே????" என்றான் விவேக்

  

அவன் சொன்னதைக் கேட்டு விட்டு உடனே பதில் சொல்லாது அமர்ந்திருந்த பாரதி, சில வினாடிகள் கழித்து,

  

"நீங்க சொன்ன லாவண்யா பற்றி தெரியலை... ஆனால், ஸ்ருதி மேல உங்களுக்கு இவ்வளவு இன்டிரெஸ்ட்டா???" என்று வினவினாள்.

  

அவளை மீண்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு,

  

"ஆர்வம்னு இல்லைங்க... அம்மாக்கு பிடிச்சிருந்தது அவ்வளவு தான்..." என்றான் விவேக்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.