Page 4 of 4
"ரியல்லி?"
"எனக்கு ஒரு உதவி வேணும்!"
"கன்சிடர் இட் டன்! பேசவே பேசாதவங்க என் கிட்ட வந்து ஹெல்ப் கேட்குறீங்க, நான் செய்ய மாட்டேனா!"
விவேக்குடன் இத்தனை நாட்கள் பேசிய பொழுதுகளில் சான்வி இப்படி உணர்ந்ததே இல்லை. அவன் பிகு செய்யாது உதவ முன் வருவது, அதுவும் என்ன என்று கேட்காமல் கூட உதவ ஏற்றுக் கொள்வது, முதல் தடவையாக அவளை இதமாக உணர வைத்தது.
பேச வந்ததை மறந்து "தேங்க்ஸ்!" என்றாள்!
விவேக் மறுப்பக்கம் இருந்து சிரிப்பது அவளுக்கும் கேட்டது! அவனின் சிரிப்பு அவளுள் புது விதமான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தியது. போனை காதில் வைத்துக் கொண்டு பேசாமல் மௌனமாக இருந்தாள்.
தொடரும்...