(Reading time: 8 - 15 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

கணவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு, சரி என்பதாக தலை ஆட்டினாள் பவித்ரா!

  

******************

  

விவேக் பாரதியின் சிறுக்கதைகளை மும்முரமாக படித்துக் கொண்டிருந்தான். படிக்க படிக்க அவள் மேலிருந்த மதிப்பு உயர்ந்துக் கொண்டே இருந்தது. ஒரு கதையில் வீட்டை எதிர்த்து கதாநாயகனை மணம் முடிக்கிறாள் கதாநாயகி. இனிமையாக செல்லும் அவர்கள் வாழ்க்கையில் ஆறு மாதங்களிலேயே விதி விளையாடுகிறது. கதாநாயகன் ஒரு சாலை விபத்தில் உயிர் இழக்கிறான். மனமொடிந்து போகிறாள் அந்த கதாநயாகி ஆனாலும் வயதான அவளின் மாமனார் மாமியாரின் துயரை போக்க அவர்களையே தன் பெற்றோராக தத்தெடுத்து கவனித்துக் கொள்கிறாள். தன மகன் இருந்திருந்தால் கூட அவர்களை இப்படி கவனித்துக் கொள்ள முடியாது என அந்த பெற்றவர்கள் மனம் உருகி சொல்லும் அளவிற்கு அவர்கள் மேல் அன்பு மழை பொழிகிறாள். 

  

மற்றொரு கதையில் நேர்மை வழியில் செல்லாத தன் உயிருனும் மேலான கணவனை திருத்த முயற்சி செய்து அது பலனளிக்காததால், அவனுக்கு எதிராகவே செயல் பட்டு அவனுக்குத் தண்டனை பெற்றுத் தருகிறாள் ஒரு பெண். முதலில் அவளின் செய்கையால் கோபம் கொண்டு குமுறும் அவள் கணவன் இறுதியில் தன் தவறை உணர்ந்து இனி தண்டனை முடிந்து வரும் போது புதிய மனிதனாக வருவேன் என்று உறுதி அளித்து செல்கிறான்.

  

எல்லா கதைகளும் பெண்களை மையமாக கொண்டவை தான்... ஆனால் எதிலுமே அவள் அவளின் கதாநாயகிகளை நிஜ வாழ்க்கையை விட பெரிதான பாத்திரமாக காட்டவில்லை... ஒரு சராசரி பெண், சுய மரியாதை உள்ளவளாக, நேர்மை குணமுள்ளவளாக, அன்பும் பாசமும் உள்ளவளாக இருந்தால் எப்படி நடந்துக் கொள்வாளோ அப்படி தான் அவளின் கதாபாத்திரங்களும் இருந்தன. பாரதி மேல் அவனுக்கு இருந்த மதிப்பு மேலும் உயர்ந்தது.

  

விவேக்கிற்கு பாரதியை உடனேயே நேராக பார்த்து பாராட்ட வேண்டும் என்று ஆவல் பிறந்தது. ஆனாலும் மனதை கட்டுபடுத்திக் கொண்டு, சனிக்கிழமை வரை காத்திருந்தான். சனிக்கிழமை காலையிலேயே பாரதியைக் காண ஆர்வத்துடன் ஹாஸ்டலுக்கு சென்றான். பாரதியை பார்க்க வந்திருப்பதாக சொல்லி விட்டு அவன் காத்திருந்த அந்த ஒரு சில

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.